E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டிற்கான பொதுத் திறைசேரியின் வியாபார, தீர்வை மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின் முன்னேற்றச் செயற்பாட்டு அறிக்கை
(ii) 2010 ஆம் ஆண்டிற்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

தேசிய தொழில்துறை முகாமைப் பயிற்சி நிறுவகம் (திருத்தம்)

1976 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, தேசிய தொழில்துறை முகாமைப் பயிற்சி நிறுவகச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ கனக ஹேரத் அவர்களுக்கு “தொழில்நுட்பத்தையும் சமூக சேவையையும் உயர்த்துவதற்கான கல்வி நிலைய (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ எம்.பீ. பாறூக் அவர்களுக்கு “இலங்கை ஒளிப்படவியலாளர் சங்கங்களின் பேரவை (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) என்பவை முறையே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2014) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2014) ஒதுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 2014, 95 பெரும்பான்மை வாக்குகளால் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

மேலும் விபரங்களுக்கு 'வரவு செலவுத் திட்டம் 2014' பிரிவுக்கு விஜயம் செய்க.


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 10 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(iv) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(v) உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(vi) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(vii) ஏற்றுமதிகள், இறக்குமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழங்குவிதிகள்


அதனையடுத்து, 1805 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜனவரி 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks