பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டிற்கான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
(ii) 2011 ஆம் ஆண்டிற்கான சமுத்திரப் பல்கலைக்கழகம்
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான அனர்த்த முகாமைத்துவ நிலையம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iv) 2012 ஆம் ஆண்டிற்கான அரசாங்க சேவை ஆணைக்குழு
(v) 2012 ஆம் ஆண்டின் காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம்
(vi)  2012 ஆம் ஆண்டிற்கான காணி உரித்து நிருணய ஆணையாளர் நாயகம்
(vii) 2012 ஆம் ஆண்டிற்கான கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(viii) 2012 ஆம் ஆண்டுக்கான மதுவரி ஆணையாளர் நாயகத்தின் நிருவாக அறிக்கை

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைத்  தாபித்தல் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்
(ix) 2013 யூலை 18 ஆம் திகதிய 1819/27 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி
(x) 2013 யூலை 19 ஆம் திகதிய 1819/46 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி

(xi) திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள்  சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2013 ஒகத்து 01 ஆம் திகதிய 1821/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள்  சட்டத்தின் கீழ் கட்டளை

(iii) 
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்) “பிலிப் குணவர்தன ஞாபகார்த்த சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு சபையில் பிரேரிக்கப்பட்டு (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1744 மணியளவில் பாராளுமன்றம் 2013 செப்டெம்பர் 04ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks