பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு 2013 ஓகத்து 01 ஆம் திகதிய 1821/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(ii) 2009 ஆம் ஆண்டிற்கான அழகியற் கலைகள் பல்கலைக்கழகம்
(iii) 2009, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான சபரகமுவ பல்கலைக்கழகம்
(iv) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கை உயர் தொழினுட்பக் கல்வி நிறுவகம்
(v) 2010 ஆம் ஆண்டிற்கான ஊவா வெல்லஸப் பல்கலைக்கழகம்
(vi) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டப் பின்படிப்பு நிறுவனம்
(vii) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பட்டப் பின்படிப்பு நிறுவகம்
(viii) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை பெளத்த, பாளி பல்கலைக்கழகம்
(ix) 2011 ஆம் ஆண்டிற்கான புத்தசிராவக்க பிக்கு பல்கலைக்கழகம்
(x) 2011 ஆம் ஆண்டிற்கான களனிப் பல்கலைக்கழகம்
(xi) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
(xii) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
(xiii) 2011 ஆம் ஆண்டிற்கான மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

• மறைந்த கௌரவ ஜனதாச பீரிஸ்
• மறைந்த கௌரவ வல்பிடகம ஆரியபால


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ஜானக பண்டார அவர்களுக்கு “வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்ற
(கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“ஊனமுற்ற மற்றும் முதிர்வுற்ற நபர்களுக்கான நிவாரணப் நிகழ்ச்சித் திட்டத்தை துரிதப்படுத்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜானக வக்கும்புர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1705 மணியளவில் பாராளுமன்றம் 2013 செப்டெம்பர் 03ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks