பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22(1) ஆம் பிரிவின் கீழ் மதுவரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2013 ஏப்பிறல் மாதம் 03 ஆம் திகதிய 1804/16 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை (மதுவரி அறிவித்தல் இல. 957)
(ii) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் முத்திரை வரி தொடர்பில் ஜனாதிபதியினால் விதிக்கப்பட்டு, 2013 மே மாதம் 10 ஆந் திகதிய 1809/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(iii) 2012 ஆம் ஆண்டுக்கான துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான குருணாகல் மாவட்ட செயலகம் 
(v) 2012 ஆம் ஆண்டுக்கான கமநல சேவைகள் மற்றும் வனசீவராசிகள் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(vi) 2009/2010 மற்றும் 2010/2011 ஆம் ஆண்டுகளுக்கான கஹடகஹ கிறபைட் லங்கா லிமிடெட்
(vii) 2010/2011 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேசன் லிமிடட்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்கள்

2013 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை மூலம் தடைபெறாமல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி பற்றிய ஆலோசனைக் குழு - தொழில்நுட்பம், ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழு என பெயர் குறிப்பிடுமாக என கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ திலங்க சுமதிபால அவர்களுக்கு “இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சம்மேளன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ எம்.பீ. பாறூக் அவர்களுக்கு “மர்கஸ் ஸக்காபதுல் இஸ்லாமிய்யா (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) முறையே நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மற்றும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சர் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

உள்ளூரதிகார சபைகள் வெற்றிடங்களை நிரப்புதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்

சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“தொழில்நுட்ப பாடங்களை பாடசாலைகளில் அறிமுகப்படுத்தல்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ எரிக் பிரசன்ன வீரவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூலை 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks