பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகம்
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களம்
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகம்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட செயலகம்
(vi)2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(vii)2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் ஆண்டறிக்கைகள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

உள்ளூரதிகார சபைகள் வெற்றிடங்களை நிரப்புதல் (விசேட ஏற்பாடுகள்)

(262 ஆம் அத்தியாயமான) உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ்த் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூரதிகார சபைகளின் மாநகர முதல்வர், பிரதி மாநகர முதல்வர், மற்றும் உறுப்பினர்கள் என்ற பதவிகளிலான வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ஜானக பண்டார அவர்களுக்கு “இர/குருவிட்ட மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் கழக (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (கணக்காய்வாளர் தலைமையதிபதியின் சம்பளம்)

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பொதுநலவாய அரச தலைவர்களுக்கான சந்திப்பு பற்றிய மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1846 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூலை 11ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks