E   |   සි   |  

2026 மே 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 106 மற்றும் 78(ஆ) ஆகிய பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 105 ஆம் பிரிவின் கீழ் ஆளும் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரினால் ஆக்கப்பட்டு 2026 மாச்சு 12 ஆம் திகதிய 2479/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்
(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பதிவாளர் நாயகத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை,  ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருணாகல்,  பொலன்னறுவை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டச் செயலகங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வலுசக்தி சக்தி (மின்சாரப் பிரிவு) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்  119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை 


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
செஸ் வரி மற்றும் உள்ளூர் தொழிற்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள்

(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தொடர்பான பிரச்சினைகள்

கௌரவ நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
எதிர்கால இணையப் போர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இணையக் குற்றங்களிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக 2026.05.19 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் சார்பாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன அவர்கள் பதிலளித்தார்.


அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:- 
(i)    மறைந்த கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண
(ii)    மறைந்த கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண
(iii)    மறைந்த கௌரவ சந்திரதாச கலப்பத்தி
(iv)    மறைந்த கௌரவ நந்தன குணதிலக
(v)    மறைந்த கௌரவ ஜனக் மஹேந்திர அதிகாரி
(vi)    மறைந்த கௌரவ ரீ. கனகசபை



ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன வெலிப்பிட்டிய
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ  


அதனையடுத்து, 1629 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks