பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
A. (i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும் ;
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும் ;
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும்; மற்றும்
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XI, XII, XIII, XIV, XV, XVI, XVII, XVIII, XIX, XX, XXI மற்றும் XXII ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் VII, VIII மற்றும் IX ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியின் அவுஸ்திரேலியக் கடன் மற்றும் உள்நாட்டுக் கடன் உதவிகளின் கீழ் சுகாதார அமைச்சினால் செயற்படுத்தப்பட்ட அரச வைத்தியசாலைகளில் மருத்துவக் கழிவுப்பொருட்கள் முகாமைத்துவ செயற்திட்டத்தின் செயலாற்றலை மதிப்பீடு செய்தல் தொடர்பான அறிக்கையின் – VI ஆம் பகுதி
B. இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XVI மற்றும் XVII பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XX ஆம் பகுதியையும்;
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XIII ஆம் பகுதியையும்;
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXV ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும்;
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIX, XXX மற்றும் XXXI ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XIII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXII பகுதியையும்; மற்றும்
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VIII, IX, X மற்றும் XI ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா கோஸ்ட் காவலர் துறையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(v) 22016 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(vi) 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(vii) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் கணக்குகள்
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக் காட்சிச்சாலைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(x) 2015, 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் வருடாந்த அறிக்கைகள்
(xi) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xii) 2019 ஆம் ஆண்டுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xiii) 2019 ஆம் ஆண்டுக்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xiv) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(xv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் (ஒம்புட்ஸ்மன்) தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் - செலவினத் தலைப்பு 04 தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xviii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xx) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 டிசம்பர் 02 ஆம் திகதிய 2256/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீர் வழங்கல் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(464 ஆம் அத்தியாயமான) காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“காணி அபிவிருத்தி (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ காணி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
பின்வருமாறு முப்பத்திரெண்டு (32) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள், பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக:-
1. பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2. நிதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
3. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
4. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
5. நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
6. வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
7. அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
8. கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
9. சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
10. தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
11. சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
12. வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
13. கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
14. நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
15. காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
16. கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
17. பெருந்தோட்ட அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
18. நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
19. மின்சக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
20. வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
21. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
22. நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
23. போக்குவரத்து அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
24. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
25. சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
26. வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
27. கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
28. வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
29. தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
30. பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிய பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
31. பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
32. அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் ஏற்பாடுகளின் பிரகாரம், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர், மற்றும் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் வேறு ஐந்து (5) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
ஒவ்வொரு ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
(ii) சட்டவாக்க நிலையியற் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவானது, தவிசாளராக பிரதிச் சபாநாயகரையும், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் மேலும் பதினைந்து (15) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(iii) நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 116 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவானது, தவிசாளராக சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் மேலும் ஒன்பது (9) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(iv) சபைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 117 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக சபைக் குழுவானது, தவிசாளராகச் சபாநாயகரையும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் பதினான்கு (14) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
(v) ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 118 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினாறு (16) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இருபத்திரெண்டு (22) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(vii) அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவானது, தொிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இருபத்திரெண்டு (22) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(viii) பொது மனுக்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 122 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக பொது மனுக்கள் பற்றிய குழுவானது, தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இருபத்தி மூன்று (23) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
(ix) பின்வரிசைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 126 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, பின்வரிசைக் குழுவானது அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் அரசாங்கக் கட்சியின் எட்டு (8) பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் எட்டு (8) பின்வரிசை உறுப்பிர்கள் ஆகியோரைக் கொண்டிருக்குமாக.
(x) உயர் பதவிகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 127(1) இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவின் தவிசாளராகச் சபாநாயகர் இருத்தல் வேண்டும்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“சனாதிபதி அவர்களினால் நிகழ்த்தப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 பெப்ரவரி 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks