பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘B’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள கிடைக்கப் பெறல்
‘C’ : பொது மனுக்கள் பற்றிய குழுவில் கடமையாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘D’ : பின்வரிசைக் குழுவில் கடமையாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘E’ : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் கடமையாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘F’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2019 ஆம் நிதி ஆண்டுக்கான (2019.01.01 - 2019.12.31) நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை; மற்றும்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ(6) மற்றும் 153ஏ உறுப்புரைகளின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு (2019.10.01 - 2019.12.31) மற்றும் 2020 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான (2020.01.01 - 2020.03.31) கணக்காய்வுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கைகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் நீர்ப்பாசனப் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்திப் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2019 ஆம் ஆண்டுக்கான நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1969 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(3) ஆம் பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் மேம்பாட்டு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2020 ஏப்ரல் 16 ஆம் திகதிய 2171/5 ஆம் இலக்க, 2020 மே 22 ஆம் திகதிய 2176/19 ஆம் இலக்க, 2020 யூன் 30 ஆம் திகதிய 2182/10 ஆம் இலக்க மற்றும் 2020 யூலை 16 ஆம் திகதிய 2184/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய பெறுகை ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜயந்த சமரவீர - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ சாரதீ துஷ்மந்த - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ நிமல் பியதிஸ்ஸ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அனுதாபப் பிரேரணைகள்
காலஞ் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆர்.எம்.கே.பி. ரத்நாயக்க அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1159 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஒக்டோபர் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks