E   |   සි   |  

2020 செப்டெம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2019 ஆம் ஆண்டுக்கான சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2019 ஆம் ஆண்டுக்கான உணவு ஆணையாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக் காட்சிச்சாலைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2019 ஆம் ஆண்டுக்கான தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் தபால் சேவைகள் பிரிவின் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2019 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii)    2019 ஆம் ஆண்டுக்கான விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரகவள அபிவிருத்தி அமைச்சின் கிராமிய பொருளாதார அலுவல்கள் மற்றும் கால்நடை அபிவிருத்திப் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix)    2019 ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(x)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2020.02.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் நிதி ஆணைக்குழு தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xi)    2008 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகச் சட்டத்தின் 8(1)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசெம்பர் 19 ஆம் திகதிய 2154/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    2008 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகச் சட்டத்தின் 8(1)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2020 மார்ச் 13 ஆம் திகதிய 2166/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii)    2008 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகச் சட்டத்தின் 8(1)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2020 யூன் 16 ஆம் திகதிய 2180/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ காமினி லொக்குகே    -                            இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ அருந்திக்க பர்னாந்து                   
(iii)    கௌரவ இந்திக அனுருத்த ஹேரத்                   
(iv)    கௌரவ புத்திக பத்திறண        -                            பதினேழு மனுக்கள்
(v)    கௌரவ ஜயந்த கெட்டகொட                   
(vi)    கௌரவ துஷார இந்துனில் அமரசேன                   
(vii)    கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன    -    இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாஸ

சுற்றுலாத் துறைக்கு நிவாரணத் திட்டம்

மேற்சொன்ன வினாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்ற சபை முதவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-

(i)    நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) - 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்) - 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, பொருளாதாரச் சேவை விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii)    துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தம்) - 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iv)    நிதி (திருத்தம்) - 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது

(v)    இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்காக

“அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம்”

எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி அமைச்சர் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 43 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    2006 ஆண்டின் 11 ஆம் இலக்க மற்றும் 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, நிதிச் சட்டங்களின் கீழான இரண்டு கட்டளைகள்
(ii)    2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் கீழான ஐந்து கட்டளைகள்
(iii)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மற்றும் மூன்று கட்டளைகள்
(iv)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான முப்பத்தொரு கட்டளைகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பெருந்தோட்டத்துறையில் பணி புரியும் ஆசிரிய உதவியாளர்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வேலு குமார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1654 மணியளவில் பாராளுமன்றமானது 2020 செப்டெம்பர் 23ஆம் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks