E   |   සි   |  

2019 ஏப்ரல் 01ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பொது மனுக்கள் பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள பிரதயீட்டு உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான துறுசவிய நிதியத்தின் வருடாந்த அறிக்கை

(ii)    2017 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)   2017 ஆம் ஆண்டுக்கான சட்டமா அதிபதி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(v)    முதலாவது அறிக்கையில் (2017.07.01 முதல் 2017.09.30 வரை) மில்கொ (பிரைவட்) லிமிட்டெட் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vi)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள்  பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் (2017.07.01 முதல் 2017.09.30 வரை) தேசிய கால்நடைவளங்கள் அபிவிருத்தி சபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள்  பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் (2017.07.01 முதல் 2017.09.30 வரை) இலங்கை போக்குவரத்து சபை தொடர்பில்   குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட இருபத்தொராம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 4 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(iii)    நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இரும்புக் கைத்தொழிலுக்கான ஒழுங்கான வரி அறிவிடும் முறை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1920 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஏப்ரல் 02ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2019]

 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks