E   |   සි   |  


காண்க

பாராளுமன்ற அமர்வுகளுக்குத் தலைமைதாங்குவதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு.

எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வகிக்காத சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்படும் சட்டவாக்க முன்மொழிவு.

சட்டவாக்கச் செயன்முறையின் போது ஒரு சட்டமூலம்/ பிரேரணைக்கு முன்மொழியப்படும் ஒரு மாற்றம்.

தேர்தல்கள் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்து, தேர்தல் செயன்முறையில் நியாயமானதன்மையினையும் வெளிப்படைத்தன்மையினையும் வாய்மையினையும் உறுதிப்படுத்தும் ஆணைக்குழு.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஒரு தேர்தல் மாவட்டம்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பார்க்க.

அரசாங்கம், பிரதம அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது ஓர் அமைச்சர் மீது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்த உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் மற்றும் பெரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிக்கப்படுவதன் விளைவாகக் குறித்த ஆட்கள் இராஜினாமாச் செய்வதற்கு அல்லது அமைச்சரவை கலைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள ஒரு முறைசார்ந்த தீர்மானமாகும்.

தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு பாராளுமன்றத்தினால் உத்தியோகபூர்வமான முறையில் நன்றியை அல்லது பாராட்டை வெளிப்படுத்தல்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks