E   |   සි   |  

பாராளுமன்ற அலுவல்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 22 இன் பிரகாரம் பின்வரும் ஒழுங்குமுறையில் நடாத்தப்படுதல் வேண்டும்.

காண்க

அகமச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்ைள

பொது முக்கியத்துவம் மற்றும் கொள்கை தொடர்பான விடயங்கள் பற்றியும், தமக்குப் பொறுப்பளிக்கப்பட்ட அமைச்சு சம்பந்தமாக, சபையில் முன்வைக்கப்பட்ட தவறான தகவல் ஒன்றை சபையின் முன் திருத்துவதற்கும் அமைச்சு சம்பந்தமான கூற்றுக்கள் அமைச்சர்களால் விடுக்கப்படும். அமைச்சு சம்பந்தமான இக் கூற்றுக்களை மேற்கொள்ள கௌரவ சபாநாயகரின் முன் அனுமதி தேவை. கூற்றினை விடுக்கும் வேளையில் கேள்விகள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டா. ஆனால் அடுத்து வரும் ஒரு தினத்தில் இது பற்றிய விவாதமொன்றுக்கு அனுமதியளிக்கப்படலாம்..

தனிப்பட்ட விைக்ைங்ைள

சபையில், தனக்கெதிரான குற்றச்சாட்டொன்று கொண்டுவரப்படுகையில் அல்லது பாராளுமன்ற நிகழ்வு பத்திரிகையில் தவறான விதத்தில் அறிக்கை செய்யப்படுகையில், எவரேனும் ஓர் உறுப்பினர் தனிப்பட்ட விளக்கமொன்றை அளிக்க முடியும். தனிப்பட்ட விளக்கங்கள் பாதிக்கப்பட்ட உறுப்பினரால் நேரடியாக அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவ்வாறான விளக்கங்கள் அளிக்கப்பட முன்னர், உறுப்பினர்கள் கௌரவ சபாநாயகரின் அனுமதியைப் பெறவும் வேண்டும்.

சிறப்புாிகம சைள்விைள

22ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் உறுப்பினர் ஒருவர் உரிய அறிவித்தலைக் கௌரவ சபாநாயகரிடம் அளித்ததன் பின்னர் சிறப்புரிமை விடயம் ஒன்றைச் சபையில் எழுப்பலாம். ஆயினும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குறித்த அவசர பிரேரணையொன்று மற்றெல்லா அலுவல்களையும் விட முன்னிலை வகிக்கும். சிறப்புரிமை விடயமொன்றை எழுப்புவதற்காக சபையின் நடைமுறைகள் எந்த ஒரு நேரத்திலும் குறுக்கீடு செய்யப்படலாம்.

முன்னறிவித்தல் சதகவப்படாத சபாது அலுவல்ைள் ஆரம்பத்தின் சபாதான பிசரரகைைள

அமர்வு நேரங்களில் மாற்றம் செய்தல், நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தல் மற்றும் சிறப்புரிமை விடயமொன்றைச் சிறப்புரிமைகள் குழுவுக்கு சமர்ப்பித்தல் போன்ற பிரேரணைகளுக்கு முன் அறிவித்தல் தேவையில்லை. அத்துடன் அவ்வாறான பிரேரணைகள் பாராளுமன்றச் சபைத் தலைவரால் அல்லது அரசாங்க முதற்கோலாசானால் அல்லது அமைச்சரவை அமைச்சர் ஒருவரால் பிரேரிக்கப்படவேண்டும்.

முன்னறிவித்தல் சதகவப்படுைின்ற சபாது அலுவல்ைள் ஆரம்பத்தின் சபாதான பிசரரகைைள

பொதுவாக, பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்களுக்கு அறிவித்தல் தேவை. அரசாங்கச் சட்ட மூலங்கள் தனியார் உறுப்பினர் சட்டமூலங்களுக்கு முன்னதாகச் சமர்ப்பிக்கப்படும்.

அனுதாபப் பிசரரகைைள

மரணமடையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அனுதாபப் பிரேரணைகளை நிறைவேற்றும் பொருட்டுச் சபையினில் ஒரு நாளை ஒதுக்குவது பாராளுமன்ற நடைமுறையாகும். அனுதாபப் பிரேரணைகளுக்குக் குறித்த கால எல்லை எதுவும் கிடையாது.

சபாது அலுவல்ைள

அறிவித்தல் வழங்கப்பட்டதும் குறித்த ஒரு தினத்திற்கான ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டதுமான அனைத்து விடயங்களும் “பொது அலுவல்களில்” அடங்கும். சட்ட மூலங்கள், பிரேரணைகள், ஒழுங்கு விதிகள், குறைநிரப்பு மதிப்பீடுகள் மற்றும் தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் போன்றவை இவற்றில் அடங்கும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks