பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பாராளுமன்றத்தை மே மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் மே மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் கூடும் தினங்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மே 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மே 20ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை குறித்த ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.
மே 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2481/02, 2482/08 மற்றும் 2482/12 ஆகிய இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்டவை), ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் (2026.04.30ஆம் திகதி வெளியிடப்பட்ட பாராளுமன்றத்தின் 3ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான 11ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளக்கப்பட்டுள்ளன) என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மே 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை காலஞ்சென்ற முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எஸ்.ஜீ.முதுகுமாரண, சந்திரதாஸ கலப்பதி, நந்தன குணதிலக, ஜனக் மஹேந்திர அதிகாரி மற்றும் கனகசபை தம்மன்பிள்ளை ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை என்பன எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-06-11
சீன மக்கள் குடியரசில் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற இலங்கைப் பாராளுமன்ற தூதுக் குழு, அதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து 2026 ஜூன் 05 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. கௌரவ வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன அவர்களது தலைமையிலான இந்தப் பாராளுமன்ற தூதுக் குழு, 2026 மே 26 முதல் ஜூன் 04 வரை சீனாவின் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றது. இந்த விஜயத்தின் போது, இக்குழு சீனாவின் ஆளுகைக் கட்டமைப்பு, அபிவிருத்தி மூலோபாயம், சனநாயக ஆலோசனைப் பொறிமுறைகள் மற்றும் தேசியக் கொள்கை வழிகாட்டல் முதலிய தலைப்புகளில் சீனாவின் சிரேஷ்ட கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரினால் நடத்தப்பட்ட அமர்வுகளில் பங்கேற்றது. இக்குழு தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) மாநாட்டு மண்டபம் மற்றும் மக்கள் மாபெரும் மண்டபம் (Great Hall of the People) உள்ளிட்ட முக்கிய தேசிய நிறுவனங்களுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டது. மேலும், சர்வதேச தேயிலைத் தினத்தை முன்னிட்டு 2026 மே 29 ஆம் திகதி பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்விலும் இக்குழு கலந்துகொண்டது. இந்நிகழ்வானது இலங்கையின் வளமான தேயிலை பாரம்பரியத்தையும், கலாசார மற்றும் பொருளாதார உறவுகளுக்கான அதன் பங்களிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது. இந்நிகழ்ச்சித் திட்டம் ஷென்சென் (Shenzhen) மற்றும் பின்னர் குவாங்சோ (Guangzhou) ஆகிய நகரங்களிலும் தொடர்ந்ததுடன் அங்கு இக்குழு ஸ்மார்ட் உட்கட்டமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம், தகவல் தொடர்பாடல்கள், விவசாயம் மற்றும் புதிய சக்திக் கைத்தொழில்கள் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களையும் அபிவிருத்திக் கருத்திட்டங்களையும் பார்வையிட்டது. இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திர உறவு, நிறுவன ரீதியான பரிமாற்றம் மற்றும் அறிவுப் பகிர்வு என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக இந்த செயலமர்வு அமைந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வருகின்ற நட்புறவுகளையும் மேலும் வலுப்படுத்தியது.
2026-06-10
நாணயக் கொள்கை, நாணயாற்று விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு பாராளுமன்றத்தில் இன்று (ஜுன் 10) நடைபெற்றது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் முறைமை, நாணயமாற்று விகிதத்தின் போக்கு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் பராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகள் மற்றும் கருத்துக்களுக்கும் மத்திய வங்கியின் அதிகாரிகள் பதில்களை வழங்கினர்.இந்த நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-09
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஜுன் 09) பாராளுமன்றத்தில் அறிவித்தார். உயர் நீதிமன்றம் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றலாம் என்று தீர்மானித்துள்ளது. எனினும் வாசகம் 14 [முன்மொழியப்பட்ட பிரிவு 12 அ(ஆ)] மற்றும் வாசகம் 18 [முன்மொழியப்பட்ட பிரிவுகள் 17அ, 17ஆ மற்றும் 17இ] ஆம் வாசகங்கள் மட்டும் விதிவிலக்காகும். இந்த வாசகங்கள் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். நீதிமன்றம் பரிந்துரைத்தபடி திருத்தப்பட்டால், அவற்றையும் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் அறிவித்தார்.உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய (09) கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென்றும் சபாநாயகர் கட்டளையிட்டார்.
2026-06-08
பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், இலங்கைப் பாராளுமன்றத்தின் குழு அறை 02 இல் அண்மையில் நடைபெற்றது. இதில் 2026 ஆம் ஆண்டிற்கான பதவி தாங்குனர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.இதற்கமைய பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக திரு. பி.எம். ரஸீல் அவர்களும், உப தலைவராக திரு. எம்.ஐ.எம். பாஸி அவர்களும், செயலாளராக திரு. சி. மணிமாறன் அவர்களும், பொருளாளராக திரு. எம்.ரீ. செய்னுர் ரிஃபா அவர்களும், உதவிச் செயலாளராக செல்வி டி. துலாங்கனி அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக திரு. எம். மயூரேஷன் திருமதி. ஏ.ஏ.எஸ். சபாயா ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பதவி தாங்குனர்கள், பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி திரு. சீ.ஜே. கருணாரத்ன மற்றும் பிரதிப் பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான திரு. ஏ.ஜி.எம். பிக்ரி, திரு. அ. சரவணபவானந்தன், திருமதி என்.பி.சி.ஜே. நிஸ்ஸங்க ஆகியோருடன் குழுப் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks