பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-07-07
பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்தன அவர்களுக்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்தொகுதியினருக்கும் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில் பாராளுமன்ற செயலகம் கீழ்வரும் விடயங்களை வலியுறுத்துகின்றது.
இதுவரை காணப்பட்டுவந்த எல்லையற்ற எரிபொருள் வசதிக்குப் பதிலாக தற்போதைய சபாநாயகர் அவர்களின் முன்மொழிவுக்கு அமைய, கபினட் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் எரிபொருள் வசதிக்கு சமமான அளவை சபாநாயகருக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு 2025 மே 02ஆம் திகதி, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய தற்போதைய சபாநாயகருக்கு கபினட் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் எரிபொருள் வசதிக்கு சமமான அளவான மாதமொன்றுக்கு 900 லீட்டர் வரை குறைக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட PS/CSA/00/1/4/12 இலக்கத்தைக் கொண்ட 2025.01.21ஆம் திகதிய சுற்றுநிருபத்திற்கு அமைய சபாநாயகருக்குரிய உத்தியோகபூர்வ வாகனங்கள் இரண்டு (வாகன இலக்கம் CAN 8753/CBI 5198) அவரால் பயன்படுத்தப்படுவதுடன், சபாநாயகரின் ஊடகப் பிரிவின் பயன்பாட்டிற்காக NC 4923 என்ற இலக்கத்தைக் கொண்ட வான் வண்டி வழங்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் தனிப்பட்ட பணியாட் தொகுதிக்காக இணைக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 08 என்பதுடன், சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர், இணைப்புச் செயலாளர், ஊடகச் செயலாளர் மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க சுற்றறிக்கைகளின் விதிகளின் படி உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் எரிபொருள் வசதிகள் உரித்தாகின்றன.
மேலும், பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் உணவுக்காக பாராளுமன்றத்தின் ஏனைய நிறைவேற்று அதிகாரிகளுக்கு சமமாக சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் மாதாந்த சம்பளத்தில் உணவுக்காக நியமிக்கப்பட்ட தொகை அறவிடப்படுவதாகவும் பாராளுமன்ற செயலகம் குறிப்பிட்டுள்ளது.
சபாநாயகருக்கான உத்தியோகபூர்வ இல்லம் அவரின் தனிப்பட்ட நோக்கத்திற்காகவோ அல்லது கூட்டங்களுக்காகவோ அல்லது வேறு எந்தத் தேவைகளுக்கோ பயன்படுத்தப்படுவதில்லை என்பதுடன், சபாநாயகரின் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் மற்றும் இராஜதந்திர மட்டத்திலான சந்திப்புக்கள் யாவும் பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் அலுவலகத்தில் இடம்பெறுகின்றது.
அத்துடன், சபாநாயகர் தற்பொழுது தற்காலிகமாக வசித்துவரும் கொழும்பு 04, லொரிஸ் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கான மாதாந்த வாடகை 2007.04.20ஆம் திகதிய 22/2006 ஆம் இலக்க அரசாங்க நிர்வாக சுற்றிநிருபத்திற்கு அமைய அவரின் சம்பளத்திலிருந்து மாதாந்தம் செலுத்தப்படுவதாகவும் பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
2026-11-28
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஆறாவது நாளான இன்று (நவ. 28), பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செலவுத் தலைப்புகள் (103, 222 முதல் 224, 304, 325) பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டன.குழுநிலை விவாதத்தின் பின்னர் இன்று பிற்பகல் 6.20 மணியளவில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் 103ஆம் இலக்க செலவுத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பொன்றைக் கோரினார். அதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 04 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய, 81 மேலதிக வாக்குகளால் குறித்த (103) செலவுத் தலைப்பு நிறைவேற்றப்பட்டது.அதேநேரம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் 225ஆம் இலக்க செலவுத் தலைப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதுடன், ஏனைய செலவுத் தலைப்புகள் (189, 226, 320) வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
2026-11-27
2027ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின் 05வது நாளான இன்று (நவ. 27) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செலவுத் தலைப்புக்கள் (124, 216, 331) மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் (151, 290) திருத்தங்கள் இன்றி, வாக்கெடுப்பு இன்றியும், கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் 151ஆம் இலக்க செலவுத் தலைப்பு திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றியும் நிறைவேற்றப்பட்டன.
2026-11-27
கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் கழிவுகளை புத்தளம், அறுவைக்காடு பகுதிக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்காக இதுவரை 26,151.89 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கௌரவ பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்தார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், இத்திட்டத்தின் அனைத்து நிர்மாணப் பணிகள், செயற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், திட்டத்துடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை ஒப்பந்ததாரரிடமிருந்து பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இத்திட்டத்தின் காலப்பகுதியை நீடிப்பது மற்றும் திட்டத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய முறைமை தொடர்பில் China Harbour Engineering Company Limited நிறுவனத்துடன் கலந்துரையாடி தீர்மானிப்பதற்கும், அதற்காகக் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய திட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசத்திலிருந்து நாளாந்தம் அகற்றப்படும் 480 மெற்றிக் தொன் குப்பைகள் கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள கழிவுகளிலிருநு்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2026-11-27
கால்நடைகள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடைவதால் உள்நாட்டுத் திரவப் பால் உற்பத்திக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் கால்நடைகளின் உற்பத்தித்திறனையும் பண்ணைகளின் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க முடியும் என விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.இதற்கமைய, தேசிய பால் உற்பத்தி வேலைத்திட்டத்தை (Dairy Hub) நடைமுறைப்படுத்துவதன் மூலம் பண்ணைகளின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், உயர் இன கால்நடைகளை உருவாக்குவதற்காக செயற்கைக் கருவூட்டல் சேவைகள் மற்றும் இனப்பெருக்க முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், கால்நடைகளின் போசாக்கு நிலையை உயர்த்துவதற்காக புல் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல், கால்நடை நோய்களைக் கட்டுப்படுத்தி தடுப்பதுடன் கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்துதல், பண்ணை முகாமைத்துவம், கால்நடை நலன்புரி மற்றும் பால் உற்பத்தி வினைத்திறனை மேம்படுத்துதல், விவசாயிகளுக்குப் பயிற்சி, தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் விரிவாக்கச் சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கைகள் மூலம் ஒரு கால்நடையிடமிருந்து பெறப்படும் பாலின் அளவையும் ஒட்டுமொத்த பண்ணை உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதன் ஊடாக உள்நாட்டுத் திரவப் பால் உற்பத்தியை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடைவது திரவப் பால் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், கால்நடைகளின் உற்பத்தித்திறனையும் பண்ணைகளின் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதன் மூலம் அந்தப் பாதிப்பைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடையவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் தெரிவித்தார்.2015 ஆம் ஆண்டில் 1,227,379 ஆகக் காணப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 1,525,717 ஆக அதிகரித்துள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டில் 381,431 ஆகக் காணப்பட்ட எருமைகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 448,606 ஆக அதிகரித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், அக்காலப்பகுதியில் ஒட்டுமொத்தத் திரவப் பால் உற்பத்தியில் தொடர்ச்சியான வீழ்ச்சி எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.2023 ஆம் ஆண்டில் 371.73 மில்லியன் லீற்றராகக் காணப்பட்ட ஒட்டுமொத்தத் திரவப் பால் உற்பத்தி, 2025 ஆம் ஆண்டில் 410.16 மில்லியன் லீற்றராக அதிகரித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks