கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற கூட்டமொன்றைக் கூட்டுவதற்கான அறிவித்தலை பாராளுமன்றச் செயலாளர் நாயகம் வாசித்தார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : "வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி(திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
2 : "கம்பெனிகள் (திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
3 : "இலங்கை மின்சாரம் (திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
4 : பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும அவர்களின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகின்றமை தொடர்பானது
5 : வழிவகைகள் பற்றிய குழுவின் தவிசாளர் பதவி வெற்றிடமாகின்றமை தொடர்பானது
6 : உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் பதவி வெற்றிடமாகின்றமை தொடர்பானது
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXI ஆம் பகுதியையும்;
• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVI ஆம் பகுதியையும்; மற்றும்
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXVII ஆம் பகுதி
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியின் புகையிரத தொடர்பாடல் முறைமையை நவீனமயப்படுத்துவதற்கான செயற்திட்டத்தின் செயலாற்றல் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வு அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான இறுதி வரவு செலவுத்திட்ட நிலை அறிக்கை (வருடாந்த அறிக்கை).
(ii) 2024 இன் நான்காம் காலாண்டு மற்றும் 2025 இன் முதலாம் காலாண்டு தொடர்பான, நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கை.
(iii) 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் 11(3) ஆம் பிரிவின் பிரகாரம், 2026 ஆம் ஆண்டிற்கான நிதி செயல் நுணுக்கக் கூற்று.
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(v) 2024 ஆம் ஆண்டுக்கான திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(vi) 2024 ஆம் ஆண்டுக்கான கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(vii) 2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2025.05.01 முதல் 2025.05.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு.
(viii) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு நிவாரண மன்றத்தின் வருடாந்த அறிக்கை.
(ix) 2023 ஆம் ஆண்டுக்கான சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை.
(x) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை.
(xi) 2024 ஆம் ஆண்டுக்கான சட்டமா அதிபதி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xii) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.
(xiii) 2024 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சரோஜா சாவித்திரி போல்ராஜ்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக்க ஜயகொடி -இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
2026 ஆம் ஆண்டிற்கான நிதி செயல் நுணுக்கக் கூற்று
2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11(3) ஆம் பிரிவின் பிரகாரம், 2026 ஆம் ஆண்டிற்கான நிதி செயல் நுணுக்கக் கூற்று நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவா்களினால் அறிவிக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“நிதி செயல் நுணுக்கக் கூற்று” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1645மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூலை 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-09-09
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அமர்வு2 : பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து அறிக்கைகளையும் இலத்திரனியல் வடிவில் பெறுவது குறித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் விருப்பத்தையும் கண்டறிதல் பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2025 ஆம் ஆண்டுக்கான நீதிச்சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(ii) 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iv) 2023 ஆம் ஆண்டுக்கான ஜி எஸ் எம் பி டெக்னிகல் சேவிசஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை(v) 2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்ட கம்பனியின் ஆண்டறிக்கை(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை (பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் – 488) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை (பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் – 490) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(viii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகளின் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை(ix) 2025 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(x) 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(xi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கட்டிடத் துறை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அரசு தொழிற்சாலைகள் துறை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xiii) அப்போதைய நீர் வழங்கல் அமைச்சு, அப்போதைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, அரசுத் தொழிற்சாலைகள் துறை மற்றும் கட்டிடத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் ராஜபக்ஷ் (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்ப குமார(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சிபாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையிலான படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திட்டம் (ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)சபையால் நிறைவேற்றப்பட்டது.ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத்(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹஅதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-09-08
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சனாதிபதியின் செய்திகள்1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : "இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல் 3 : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல் 4 : “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல் 5 : “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல் சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─ • 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஒன்பதாவது தொகுதியின் XLVII (47) ஆம் பகுதியையும்; மற்றும்• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் II (2) ஆம் பகுதி(ii) 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31(1)(ஆ) ஆம் பிரிவின் பிரகாரம், இலஞ்சம் அல்லது ஊழலுக்கெதிரான சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு, நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அவதானிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழலுக்கெதிரான சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2024 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை(ii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்(iii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்(iv) 2024 ஆம் ஆண்டுக்கான கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்கும்(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய கல்வி ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vii) 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 24(4) ஆம் பிரிவு மற்றும் 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு என்பவற்றின் பிரகாரம் 2026 மார்ச் 13 ஆம் திகதி முதல் 2026 யூன் 30 ஆம் திகதி வரை “வீரமென்ட் நடைமுறையின் கீழ் செய்யப்பட்ட ஒதுக்கீடுகளின் பரிமாற்றங்கள்” தொடர்பான விவரங்கள் குறித்த அறிக்கை(viii) 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.(ix) 2025 ஆம் ஆண்டுக்கான அப்போதைய நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் நகர அபிவிருத்தி பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(x) 2021/2022, 2022/2023 மற்றும் 2023/2024 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட கல்ஓயா பெருந்தோட்ட தனியார் கம்பனியின் வருடாந்த அறிக்கைகள்(xi) 2024 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை(xii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை(xiii) 2024/2025 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை(xiv) 2025 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஊழியர் சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(xv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வடமேற்கு மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xvi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வடக்கு மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xvii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xviii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஊவா மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xix) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வடமேற்கு மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xx) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தென் மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xxi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சபரகமுவ மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xxii) 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(xxiii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தற்காலிகத் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜகத் குணவர்தன (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி (v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கையின் ஏற்றுமதிகள் மற்றும் முதலீட்டு வருமானம் அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்ஒலுவில் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் விபரங்கள் தொடர்பாக 2026.06.24 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே.காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-(i) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) - (218 ஆம் அத்தியாயமான) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கானது(ii) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) - (218 ஆம் அத்தியாயமான) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கானதுஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க)சபையால் அங்கீகரிக்கப்பட்டன.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை சமூக ஊடக தளங்களிலிருந்து பாதுகாத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 9ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-08-21
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதி – இலங்கை பாராளுமன்றத்தின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது கூட்டத்தொடர்கள் தொடர்பான தயாரிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கைபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(ii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தற்காலிகத் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கனாத் - இரண்டு மனுக்கள் (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசஎக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் பேரழிவின் இழப்பீட்டுத் தொகை மற்றும் ஏனைய விபரங்கள்(ii) கௌரவ ரவி கருணாநாயக்கமின் உற்பத்தி, மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மற்றும் பிற விபரங்கள்இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 118 - நிகழ்ச்சித்திட்டம் 02 (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) சபையால் அங்கீகரிக்கப்பட்டது.ஒத்திவைப்புப் பிரேரணை“நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-08-20
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை (இதழ் I - பொதுக் கல்வி, இதழ் II - உயர்கல்வி மற்றும் இதழ் III - தொழிற்கல்வி)(ii) 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.07.01 முதல் 2026.07.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு(iii) 2026 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு(iv) 2022 ஆம் ஆண்டுக்கான தொலைதூர கற்கை நிலையத்தின் வருடாந்த அறிக்கை(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுற்றாடல் அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண கமகே - இரண்டு மனுக்கள் (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் றாஜபக்ஷ (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ கே.காதர் மஸ்தான்சுகாதாரத் துறையில் ஆடை விதிமுறைகளில் உள்ள சிக்கல்கள்கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்புற்றுநோயாளிகளுக்கு மருந்து பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள்கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.சிறப்புரிமைகள்பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2026 ஜூலை 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) சபையால் நிறைவேற்றப்பட்டது.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“முஸ்லிம் தாதியர் உதவியாளர்கள் எதிர்கொள்ளும் ஆடை விதிமுறைச் சிக்கல்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1810 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.