பார்க்க

01

E   |   සි   |  

2026-10-20

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2026 ஒக்டோபர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
2 : “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
3 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
4 : தேசிய ஊழல் தடுப்புச் செயல் திட்டத்தின் (2025-2029) கீழ் பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகளின் செயலாக்கத்திற்குத் தலைமையேற்கவும் மேற்பார்வையிடவும் 13 உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் நியமனம்
5 : உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து எதிர்க்கட்சியினரால் கோரப்பட்ட பாராளுமன்ற விவாதம்
6 : டிஜிட்டல் வடிவத்திலான பாராளுமன்ற வெளியீடுகள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLIX (49) பகுதியையும்; 
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் L (50) மற்றும் LI (51) பகுதிகளையும்; மற்றும்
•    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VIII (8), IX (9), X (10), XI (11) மற்றும் XII (12) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் VIII (8) IX (9), X (10) மற்றும் XI (11)  ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் IV (4), V (5) மற்றும் VI (6)  ஆம் பகுதிகள்
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் முதலாவது தொகுதியின் VI (6) ஆம் பகுதியையும்,  நான்காவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகளையும் மற்றும் ஐந்தாவது தொகுதியின் V (5) ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii)    2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(iii)    2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் லைஃப் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(iv)    2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(v)    2026 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii)    1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மற்றும் 1998 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 ஓகத்து 18 ஆம் திகதிய 2502/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் எஸ் எல் ரி கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவமனமானது ஸ்ரீலங்கா டெக்னொலொஜி கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்தல் தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மே 16 ஆம் திகதிய 2384/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவனத்தினால் வழங்கப்படும் புடவை மற்றும் ஆடைக் கற்கைகளில் விஞ்ஞான இளமாணி தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 யூலை 22 ஆம் திகதிய 2446/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ என்னும் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (உத்தரவாதம்) லமிட்டெட்டினால் வழங்கப்படும் கௌரவ இளமாணி தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஓகத்து 21 ஆம் திகதிய 2450/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ என்னும் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் கே ஐ யூ கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் வழங்கப்படும் அக்குபஞ்சர் மருத்துவ விஞ்ஞானத்தில் கௌரவ இளமாணி தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 17 ஆம் திகதிய 2454/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் அமெரிக்கன் கொலேஜ் ஒப் ஹயர் எடியுகேஷன் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் வழங்கப்படும் உளவியல் விஞ்ஞான இளமாணி சிறப்பு பட்டம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 22 ஆம் திகதிய 2455/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் ஈசொப்ட் மெற்றோ கம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவமனமானது ஈசொப்ட் யுனி (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்தல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஒற்றோபர் 13 ஆம் திகதிய 2458/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் எஸ்எல்ரி கம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் வணிக பகுப்பாய்வில் விஞ்ஞான இளமாணி சிறப்பு பட்டம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025   திசெம்பர் 23 ஆம் திகதிய 2468/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(xvi)    2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஆண்டறிக்கை
(xvii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(xviii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(xix)    2025 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xx)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மத்திய மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேல் மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(xxiii)    2025 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxiv)    2025 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
காவந்திஸ்ஸ தந்த யானையின் மரணம்

கௌரவ சுற்றாடல் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
2026 ஒக்டோபர் 17 அன்று நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை 

கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i)    2026 ஒக்டோபர் 17 அன்று நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை பற்றிய கூற்றொன்றினை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் முன்வைத்தார்.
(ii)    காவந்திஸ்ஸ தந்த யானையின் மரணம் பற்றிய கூற்றொன்றினை சுற்றாடல் அமைச்சர் கௌரவ (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி அவர்கள் முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம் 
கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் - வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலை தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான 2014 ஆம் ஆண்டு செத்தெம்பர் 24 ஆந் தேதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 2178 இற்கு பயன்கொடுப்பதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்கானது
(ii)    ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் - நாடுகளுக்கிடையேயான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கெதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்துக்குப் பயன்கொடுப்பதற்கும்; பயனுள்ள தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பினூடாகப் பாரதூரமான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவும் புலனாய்வு செய்வதற்காகவும் மற்றும் அவற்றுக்கெதிராக குற்றவழக்குகளைத் தொடுப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியற் குழுக்களினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்கானது


கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2025 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2026 டிசெம்பர் 21 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்படுமாக.


ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப்  பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-11-14

2026 நவம்பர் 14ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம - இரண்டு மனுக்கள் (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க - மூன்று மனுக்கள்(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ சஜித் பிரேமதாசகொழும்பு நகர வெள்ளப்பெருக்கு தொடர்பான விசாரணை முதலியன அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முறையான வழிமுறை தொடர்பாக 2026.09.22 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள் பதிலளித்தார்.சிறப்புரிமைக் கேள்விகள்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா  நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது தொடர்பான தேர்தல் ஆணையாளரின் கடிதம்இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2027) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாள்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)இதனையடுத்து, 1841 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2026 நவம்பர் 16ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2026-11-13

2026 நவம்பர் 13ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXXIII (33) ஆம் பகுதியையும்;  மற்றும் •    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XVIII (18), XIX (19), XX (20), XXI (21) மற்றும் XXII (22) ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XII (12), XIII (13), XIV (14) மற்றும் XV (15) ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் VIII (8), IX (9), X (10), XI (11), XII (12), XIII (13), XIV (14), XV (15), XVI (16), XVII (17), XVIII (18), XIX (19), XX (20), XXI (21), XXII (22), XXIII (23), XXIV (24) மற்றும் XXV (25) ஆம் பகுதிகள்(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXIV (34) ஆம் பகுதியையும்;  மற்றும் •    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXII (22), XXV (25), XXVI (26) மற்றும் XXVII (27) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XIV (14) மற்றும் XVI (16) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XVII (17),  XX (20) மற்றும் XXI (21) ஆம் பகுதிகள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றிய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(ii)    2026 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு(iii)    1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2026 ஒற்றோபர் 12 ஆம் திகதிய 2510/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்(iv)    2023 ஆம் ஆண்டுக்கான நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சீ. கிளார்க் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன - இரண்டு மனுக்கள் (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி - மூன்று மனுக்கள் (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிரி - நான்கு மனுக்கள்(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை முழுமையாகச் செலவிடாமைஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2027) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட முதலாம் நாள்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“கொழும்பு நகர வெள்ளப்பெருக்கிற்கான விசாரணை, தீர்வு மற்றும் இழப்பீடு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அமில பிரசாத் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.இதனையடுத்து, 1840 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2026 நவம்பர் 14ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2026-11-12

2026 நவம்பர் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : "இலங்கைக் கிரிக்கெட்" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்2 : "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்3 : "குடிவரவு" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    வரவுசெலவுத்திட்ட, பொருளாதார மற்றும் நிதி நிலை அறிக்கை 2027(ii)    பிரதான பொது முதலீட்டுக் கருத்திட்டங்கள் 2027 - 2029(iii)    தேசிய வரவு செலவுத்திட்டம் 2027 - மக்கள் வரவுசெலவுத்திட்டம்(iv)    நடுத்தரக் கால படுகடன் முகாமைத்துவ மூலோபாயம் 2027-2031 மற்றும் வருடாந்த கடன் பெறுகைத் திட்டம் - 2027(v)    வரிச் செலவினங்கள் பற்றிய கூற்று – 2025/2026(vi)    அரசதுறை பதவியணி பற்றிய தகவல்கள் - 2026(vii)    மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை  - 2026(viii)    2027 ஆம் நிதியாண்டிற்கான இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டு வரைபுஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) - இரண்டாம் மதிப்பீடுகௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் இன்று பி.ப. 1.40 மணியளவில் (2027ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றினார்.சபாநாயகரின் அறிவித்தல்கள்2027 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கான குழு நிலையின் போது பிரேரிக்கப்படவுள்ள திருத்தங்கள் அனைத்தும், நவம்பர் 16 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.இதனையடுத்து, 1831 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2026 நவம்பர் 13ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2026-11-06

2026 நவம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : சிறப்புரிமை கேள்விகள் எழுப்பக் கோரி 2026 நவம்பர் 3 ஆம் திகதி 5 பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை சம்பந்தமாக 2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்3 : 2026 நவம்பர் 12ஆம் திகதி, வியாழக்கிழமை தினத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பானதுசபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்A.    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் –•    2019 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVI (46)  ஆம் பகுதியையும்;  •    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் L (50)  ஆம் பகுதியையும்;  •    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXIX (69) ஆம் பகுதியையும்; மற்றும் •    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XX (20) மற்றும் XXI (21) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XIV (14), XV (15) மற்றும் XVI (16) ஆம் பகுதிகள்B.    (i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XXXI (31)  ஆம் பகுதியையும்;  •    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XXVII (27) ஆம் பகுதியையும்; மற்றும் •    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XV (15), XVI (16) மற்றும் XVII (17) ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் IX (9), X (10) மற்றும் XI (11) ஆம் பகுதிகளையும் ஐந்தாவது தொகுதியின் IX (9)  ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் IV (4), V (5), VI (6) மற்றும் VII (7)ஆம் பகுதிகள்(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2025 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் வருடாந்த அறிக்கைபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான நலன்புரி நன்மைகள் சபையின் வருடாந்த அறிக்கை(ii)    2025 ஆம் ஆண்டுக்கான சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு நிவாரண மன்றத்தின் (தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை) வருடாந்த அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா - மூன்று மனுக்கள் (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி                    (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன - மூன்று மனுக்கள் (v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலங்க யூ. கமகே                    (vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசஇலங்கையில் வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம்  மேற்சொன்ன வினாவிற்கு தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்எரிபொருள் மானியம் தொடர்பான பிரச்சினைகள்  மேற்சொன்ன வினாவிற்கு தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    2026 மஹா பருவகாலத்தின் போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 2026.11.03 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.(ii)    ஜப்பானில் நடைபெற்ற 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செல்வி பாத்திமா ஷபீயா சேர்க்கப்படாமை தொடர்பாக 2026.10.23 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2, 3, 4, 6 மற்றும் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-•    புத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல்மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் பெருமளவில் பொதுப் போக்குவரத்து சேவைகளை நாடும் போக்கு காணப்படுவதாலும், அத்துடன் தினமும் பெருமளவானோர் தொழில் நிமித்தமாகவும்  வர்த்தக தேவைகளுக்காகவும் புத்தளம் பாதையில் பயணம் செய்வதாலும், அப்பயணிகளுக்கு போதுமான சேவையை வழங்கும் நோக்கில் புத்தளம் கொழும்பிற்கிடையிலான புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.•    வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் உள்ள மரங்கள் பாதசாரிகளுக்கு நிழல் வழங்குவதிலும், சுற்றாடலின் அழகையும் பசுமையையும்  மேம்படுத்துவதிலும், வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுபடுத்தும் வாயுக்களை உமிழ்வதிலும், நகர்ப் பிரதேசங்களில் உயிரியல் வழித்தடங்களாகச் (bio corridors) செயற்படுவதிலும் பாரிய பங்களிப்புக்களைச் செய்வதாலும், இலங்கையின் வீதி ஒதுக்குப்பிரதேசங்களில் உள்ள மரங்கள் தொழில்முறையாக (arborists மூலம்) நிர்வகிக்கப்படாததாலும், மின் விநியோக நிறுவனங்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA), மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை (PRDA), உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் மூலம் மின்கம்பிகளையும் வீதி சமிக்ஞைகளையும் மறைக்கும் கிளைகளை மாத்திரம் வெட்டி அகற்றுவதில் முறையற்ற வழிமுறையினை செயற்படுத்தப்படுவதாலும், சுற்றாடலின் எழிலைப் பாதுகாக்கும் வகையில் வீதி ஒதுக்குப் பிரதேசங்களின் அளவுகளை உரிய முறையில் நிர்ணயிப்பதன் மூலமும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களைப் பயிற்றுவித்து, தாவரங்களைப் பராமரித்து வீதி ஒதுக்குப்பிரதேசங்களில் உள்ள மரங்களை முறையாக நிர்வகிப்பதன் மூலமும் விபத்துகளையும் பேரழிவுகளையும் தடுத்துக்கொள்ளக்கூடிய முறையான வழிமுறையொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.•    இலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல்இலங்கையின் கல்வித் தரத்தை முன்னேற்றமடைந்த சர்வதேச மட்டத்துக்குக் கொண்டுவருவதன் பொருட்டு பாடசாலைக் கட்டமைப்பைச் சேர்ந்த சகல ஆசிரியர்களையும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றியமைக்க வேண்டியுள்ளதாலும், தற்போது பெரும்பாலான ஆசிரியர் களுக்கு மூன்றாண்டு கால கோட்பாட்டு மற்றும் செய்முறை ரீதியான பாடநெறியின் இறுதியில் உயர் டிப்ளோமா கிடைப்பதாலும், மூன்றாண்டு கால கோட்பாட்டு ரீதியான பாடநெறி மற்றும் பாடசாலையை மையப்படுத்திய ஓராண்டு கால பயிற்சியுடன்கூடிய நான்காண்டு கால பட்டப்படிப்பு பாடநெறியை அளிப்பதற்கேற்ற வகையில் தற்போது இயங்கி வரும் 19 கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றியமைப்பதற்கு அப்போதைய கல்வி அமைச்சரினால் 2020 பெப்ரவரி 13 ஆந் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.•    உடவளவை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல்உடவளவை தேசியப் பூங்கா, உடவளவை யானைகள் சரணாலயம், சங்கபால ரஜமகா விகாரை, உடவளவை நீர்த்தேக்கம், செவனகல சீனித் தொழிற்சாலை, செவனகல கரும்பு ஆராய்ச்சி நிலையம், உடவளவை நன்னீர் மீன்பிடி நிலையம் மற்றும் வவுல்பன  சுண்ணாம்புக்கல் குகை முதலிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இடங்கள் காணப்பட்ட போதிலும், முறையான ஒரு வேலைத்திட்டம் இன்மையாலும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றின் பெறுமதியைக் கண்டுகளிக்க முடியாதிருப்பதாலும் இரத்தினபுரி மாவட்டத்தின் உடவளவை மற்றும் மொனராகலை மாவட்டத்தின் செவனகல ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக உடவளவை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.•    நீர்த்தாமரை செடியின் பரவலை சாதகமான வகையில் கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல்நீர்த்தாமரை அல்லது Eichhornia crassipes (Mart.) Solms என்ற அறிவியல் பெயர்கொண்டு அழைக்கப்படும் ஆக்கிரமிப்புத் தாவரம், தற்போது விவசாய நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் முழுவதுமாக பரவிச் சென்றுள்ளதாலும், இதன் துரித வளர்ச்சி வேகத்தின் காரணமாக உள்நாட்டுத் தாவரங்களையும் விஞ்சி உயிரியல் சூழல் தொகுதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாலும், இதன் விளைவாக வண்டல் மண் படிந்து நீர் வழிப் பாதைகள் மற்றும் நீர் வழிந்தோடல் என்பன தடைப்படுவதனூடாக வெள்ளப் பெருக்கு நிலைமைகள் ஏற்படுவதாலும், அன்றாட பாவனைக்கு அவசியமான நீரின் தரம் மாசடைவதாலும் நீர் மின்னுற்பத்திக்கு தடையாக அமைந்துள்ளதாலும், இரசாயன களைக்கொல்லிப் பயன்பாட்டினூடாக அவற்றை அழித்தல், அந்நீரைப் பயன்படுத்தும் நபர்களுக்கு சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாலும், இதன் விளைவாக ஏற்படும் நுளம்புக் குடம்பிகளின் பெருக்கத்தின் காரணமாக யானைக்கால் நோய் மற்றும் டெங்கு நோய் போன்றவை பரவி வருவதாலும், இத்தாவரத்தை சாதகமான வகையில் கட்டுப்படுத்துதல் மற்றும் அழிப்பதனூடாக நிலையான தீர்வினை வழங்கும் பொருட்டு அரசாங்கத்தினால் அதற்கேதுவான கருத்திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல் காலோசிதமானதென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையப் பணிகளை முடிவுறுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1652 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks