கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
2 : கல்வி மறுசீரமைப்பு குறித்து கௌரவ உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் ஒரு நிகழ்ச்சி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ. பீ. சரத்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் ஹென்னாயக்க - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
வரவுசெலவுத் திட்டம்-2026 இன் முன்மொழிவுகளின் அமுலாக்கம் மற்றும் பௌதீக, நிதிசார் முன்னேற்றம்
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மோதல் காரணமாக இலங்கைக்கு ஏற்படும் பொருளாதார மற்றும் நிதிசார் தாக்கம்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்புகளிலுள்ள சிக்கல்கள் தொடர்பாக 2026.08.18 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
(ii) ‘நாட்டில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) வானிலை நிலைமை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தணிப்பு நடவடிக்கைகள்’ மற்றும் ‘நாட்டில் தித்வா பேரழிவிற்குப் பின்னரான முகாமைத்துவம் மற்றும் எல் நினோ நிலைமை’ தொடர்பாக முறையே 2026.09.10 மற்றும் 2026.09.23 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 11 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் (ச.வ.-ஓ 8/2026) – திருத்தங்களுடன்
(ii) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் (ச.வ.-ஓ 11/2026) – திருத்தங்களுடன்
(iii) தொழில் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(iv) தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(v) மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2015)
(vi) மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2016)
(vii) மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2017)
(viii) மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2018)
(ix) ரணவிரு சேவா அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2023)
(x) ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(xi) ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2023)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தாய்லாந்து துணைப் பிரதமருக்கு இராஜதந்திர வரவேற்பை வழங்குவதில் அரசாங்கத்தின் குறைபாடுகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1758 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-10-23
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்2 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களை விழிப்புணர்வூட்டும் கூட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2025 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை(ii) 2025 ஆம் ஆண்டுக்கான ஜய கன்டேனர் டர்மினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பலிஹேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். சமந்த ரனசிங்ஹ - இரண்டு மனுக்கள் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ கே.காதர் மஸ்தான்ஜப்பானில் நடைபெற்ற 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செல்வி பாத்திமா ஷபீயா சேர்க்கப்படாமை(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்ஆசிரியர்களைச் சேவைக்குச் சேர்த்தல் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படாமைமேற்சொன்ன வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i) மாதவணை பகுதியில் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக 2026.09.23 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.(ii) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக 2026.09.25 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“பெந்தர, கரந்தெனிய மற்றும் எல்பிட்டிய ஆகிய பிரதேசங்களை புதிய சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1759 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-10-21
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்2 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்3 : “குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்4 : புதிய குழு காப்புறுதித் திட்டம் குறித்து கௌரவ உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் ஒரு நிகழ்ச்சிபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2025 ஆம் ஆண்டுக்கான பொதுப் படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அப்போதைய தொழில்நுட்ப அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iii) 2025 ஆம் ஆண்டுக்கான தென் மாகாண சபையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேல் மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்சட்டவிரோத மது அருந்துதல் மற்றும் புதிய மதுபான உரிமங்கள் தொடர்பான பிரச்சினைகள்கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனாதிலீபன் நினைவு நாள் தொடர்பான பிரச்சினைகள்கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்‘மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் கொலைகள் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணை விபரங்கள்’ மற்றும் ‘இன நல்லிணக்கத்தையும் தேசிய பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்’ தொடர்பாக முறையே 2026.08.07 மற்றும் 2026.10.09 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் மற்றும் கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் எழுப்பிய வினாக்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் (87 ஆம் அத்தியாயமான) நம்பிக்கைப்பொறுப்புக்கள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்காக“நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தம்)”எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 12 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i) பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணை (ii) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 243 - நிகழ்ச்சித்திட்டம் 02(iii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2021) (iv) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2022) (v) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2023) (vi) பீ.சீ.சீ. லங்கா லிமிட்டட் கம்பனியின் வருடாந்த அறிக்கை (2021/2022) (vii) பீ.சீ.சீ. லங்கா லிமிட்டட் கம்பனியின் வருடாந்த அறிக்கை (2022/2023) (viii) தேசிய உப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2021/2022) (ix) தேசிய உப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2022/2023) (x) தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2022) (xi) இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2023) (xii) இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2023)ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டாரஅதனையடுத்து, 1732 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 22ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-10-20
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்3 : “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்4 : தேசிய ஊழல் தடுப்புச் செயல் திட்டத்தின் (2025-2029) கீழ் பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகளின் செயலாக்கத்திற்குத் தலைமையேற்கவும் மேற்பார்வையிடவும் 13 உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் நியமனம்5 : உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து எதிர்க்கட்சியினரால் கோரப்பட்ட பாராளுமன்ற விவாதம்6 : டிஜிட்டல் வடிவத்திலான பாராளுமன்ற வெளியீடுகள்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -• 2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLIX (49) பகுதியையும்; • 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் L (50) மற்றும் LI (51) பகுதிகளையும்; மற்றும்• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VIII (8), IX (9), X (10), XI (11) மற்றும் XII (12) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் VIII (8) IX (9), X (10) மற்றும் XI (11) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் IV (4), V (5) மற்றும் VI (6) ஆம் பகுதிகள்(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் முதலாவது தொகுதியின் VI (6) ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் IV (4) மற்றும் V (5) ஆம் பகுதிகளையும் மற்றும் ஐந்தாவது தொகுதியின் V (5) ஆம் பகுதிபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2024 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஆண்டறிக்கை(ii) 2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை(iii) 2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் லைஃப் லிமிடெட்டின் ஆண்டறிக்கை(iv) 2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட்டின் ஆண்டறிக்கை(v) 2026 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vii) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மற்றும் 1998 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 ஓகத்து 18 ஆம் திகதிய 2502/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(viii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் எஸ் எல் ரி கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவமனமானது ஸ்ரீலங்கா டெக்னொலொஜி கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்தல் தொடர்பில் அப்போதைய கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 மே 16 ஆம் திகதிய 2384/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(ix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவனத்தினால் வழங்கப்படும் புடவை மற்றும் ஆடைக் கற்கைகளில் விஞ்ஞான இளமாணி தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 யூலை 22 ஆம் திகதிய 2446/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(x) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ என்னும் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (உத்தரவாதம்) லமிட்டெட்டினால் வழங்கப்படும் கௌரவ இளமாணி தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஓகத்து 21 ஆம் திகதிய 2450/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ என்னும் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் கே ஐ யூ கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் வழங்கப்படும் அக்குபஞ்சர் மருத்துவ விஞ்ஞானத்தில் கௌரவ இளமாணி தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 17 ஆம் திகதிய 2454/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் அமெரிக்கன் கொலேஜ் ஒப் ஹயர் எடியுகேஷன் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் வழங்கப்படும் உளவியல் விஞ்ஞான இளமாணி சிறப்பு பட்டம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 22 ஆம் திகதிய 2455/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xiii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் ஈசொப்ட் மெற்றோ கம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவமனமானது ஈசொப்ட் யுனி (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்தல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஒற்றோபர் 13 ஆம் திகதிய 2458/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xiv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் எஸ்எல்ரி கம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் வணிக பகுப்பாய்வில் விஞ்ஞான இளமாணி சிறப்பு பட்டம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 திசெம்பர் 23 ஆம் திகதிய 2468/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xv) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை(xvi) 2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஆண்டறிக்கை(xvii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் வருடாந்த அறிக்கை(xviii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை(xix) 2025 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(xx) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மத்திய மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xxi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேல் மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xxii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை(xxiii) 2025 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை(xxiv) 2025 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(iii) ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசகாவந்திஸ்ஸ தந்த யானையின் மரணம்கௌரவ சுற்றாடல் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ ரவி கருணாநாயக்க2026 ஒக்டோபர் 17 அன்று நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i) 2026 ஒக்டோபர் 17 அன்று நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை பற்றிய கூற்றொன்றினை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் முன்வைத்தார்.(ii) காவந்திஸ்ஸ தந்த யானையின் மரணம் பற்றிய கூற்றொன்றினை சுற்றாடல் அமைச்சர் கௌரவ (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி அவர்கள் முன்வைத்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-(i) வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் - வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலை தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான 2014 ஆம் ஆண்டு செத்தெம்பர் 24 ஆந் தேதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 2178 இற்கு பயன்கொடுப்பதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்கானது(ii) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் - நாடுகளுக்கிடையேயான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கெதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்துக்குப் பயன்கொடுப்பதற்கும்; பயனுள்ள தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பினூடாகப் பாரதூரமான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவும் புலனாய்வு செய்வதற்காகவும் மற்றும் அவற்றுக்கெதிராக குற்றவழக்குகளைத் தொடுப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியற் குழுக்களினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்கானதுகௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுகொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2025 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2026 டிசெம்பர் 21 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்படுமாக.ஒத்திவைப்புப் பிரேரணை“நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-10-09
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்2 : பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி விழாபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2024 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை(ii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜகத் குணவர்தன (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்இன நல்லிணக்கத்தையும் தேசிய பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்வட மாகாணத்திலும் மன்னாரிலும் தென்னைச் செய்கையில் 'வெள்ளை ஈ' தாக்கத்தின் விளைவு அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i) ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திலிருந்து அகற்றப்பட்ட கற்களின் ஏற்றுமதி தொடர்பாக 2026.09.09 அன்று கௌரவ திலிப் வெதஆரச்சி அவர்களினால் பிரதம அமைச்சரிடம் வினவப்பட்ட வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.(ii) சமீபத்திய எதிர்காலத்தில் எல் நினோ காலநிலையும் உணவுப் பாதுகாப்பும் தொடர்பான கூற்றொன்றினை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் முன்வைத்தார்.(iii) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அரச நிறுவனங்களிலுள்ள உத்தியோகத்தர் பற்றாக்குறை தொடர்பாக 2026.09.25 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவுக்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2, 4 மற்றும் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. 1, 4 மற்றும் 5 ஆம் விடயங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் 2 ஆம் இலக்க விடயம் குறிப்பிட்டவாறு நிறைவேற்றப்படவில்லை:-• தியகம வனத்தைப் பாதுகாத்தல்கொழும்புக்கு அருகாமையில் எஞ்சியுள்ள கடைசி நகர்ப்புறத் தாழ்நில மழைக்காடுகளில் ஒன்றாகவும் நகரத்திற்கு மிக நெருக்கமான மழைக்காட்டுப் பகுதியாகவும் தியகம வனம் காணப்படுவதனாலும்; பொல்கொட ஆற்றிற்கு நீர் வழங்கும் அதன் சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகள் ஊடாக நீரோட்டத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இயற்கையான வெள்ளத் தடுப்பு அரணாக இது முக்கிய பங்கு வகித்து, அதன் மூலம் சுற்றியுள்ள சமூகங்களை வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாப்பதனாலும்; சிவப்பு தேவாங்கு, ஊதா முகக் குரங்கு மற்றும் கொடுபுலி போன்ற அழியும் அபாயத்திலுள்ள உயிரினங்கள் உட்பட 220 இற்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்களுக்கு இந்த வனம் வாழ்விடமாக அமைந்திருப்பதனாலும்; சுமார் 12.6% நிலப்பரப்புக்குரிய தாவர இனங்களுக்கும் 11.58% நிலப்பரப்புக்குரிய விலங்கினங்களுக்கும் கடைசிப் புகலிடமாக விளங்கும் ஒரு முக்கியமான பல்லுயிர் மையமாக இது திகழ்வதுடன், இவற்றில் பல விலங்குகள் நகர்ப்புற விரிவாக்கத்தினால் அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதனாலும்; தியகம வனம் அதன் தேவாங்கு இனங்களுக்காக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன் சுற்றுச்சூழல் - சுற்றுலாவுக்கான காத்திரமான சாத்தியத்தினைக் கொண்டிருப்பதனாலும்; உயிரியல் பல்வகைமை, காலநிலை மீண்டெழுந்தன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பைப் பேணுவதற்கு இந்த வனத்தைப் பாதுகாப்பது அவசியமானது என்பதனாலும்; தியகம வனத்தின் இழப்பானது ஈடுசெய்ய முடியாதது என்பதோடு, எதிர்கால சந்ததியினருக்காகவும் இலங்கையின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காகவும்; அதன் உடனடிப் பாதுகாப்பு கட்டாயமானது என்பதனாலும் இந்தப் பாராளுமன்றம் தியகம வனப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் அனைத்து காடழிப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (FFPA) கீழ் அதனைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டுமெனவும், அதனை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமெனவும், அத்துடன் எதிர்கால ஆக்கிரமிப்புகள் மற்றும் நிலைபேறற்ற அபிவிருத்திகளுக்கு எதிராகச் சாத்தியமான வலுவான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.• 1983 ‘கறுப்பு ஜூலை’ யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல்1983 ‘கறுப்பு ஜூலை’ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளும், இன மோதல்களும், வன்முறைகளும் நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, சமூகக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது மிக மோசமான வடுக்களை ஏற்படுத்தி உள்ளதாலும், மேற்படி மோதல்கள் மற்றும் வன்முறைகளினால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டதாலும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் தீயிட்டு முழுமையாக அழிக்கப்பட்டதாலும், இச்சம்பவம் இடம்பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் இந்த மோதல்களையும் வன்முறைச் சம்பவங்களையும் வழிநடத்தியவர்கள் அடையாளங்காணப்படவில்லை என்பதாலும், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சொத்து சேதங்கள் குறித்து பரந்துபட்டதும் சுயாதீனமானதுமான விசாரணை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதாலும், இவ்வாறான இன மோதல்களும் வன்முறைகளும் இனியும் இந்த நாட்டில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துதல் மற்றும் நாட்டின் சகல இனக்குழுமங்களுக்குமிடையே நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமையாததென்பதாலும், மேற்படி வன்முறைகள் குறித்த உண்மையை கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இந்த பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• நுண் நிதிக் கடன்களைப் பெற்று அக்கடன்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்நுண் நிதிக் கடன்களைப் பெற்றுக் கொண்டவர்களுள் பெருமளவானவர்கள் தற்போது அக்கடன்களால் பாதிக்கப்பட்ட நபர்களாக இருப்பதனால், மேற்படி நபர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• இலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல்விளையாட்டு அமைப்புக்கள் இலங்கையில் பெருமளவில் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகப் புலப்படுவதன் காரணமாக, தோ்தலில் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் விளையாட்டு அமைப்புகளில் போட்டியிடுவதிலிருந்தும் தலைமைப் பதவிகளை வகிப்பதிலிருந்தும் தடை செய்யப்படுதல் வேண்டும் என இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“வலுச்சக்தி துறையை மறுசீரமைத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1633 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஒக்டோபர் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.