பார்க்க

E   |   සි   |  

2024-10-18

செய்தி வகைகள் : செய்திகள் 

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் செயற்பட்ட மொத்தக் குழுக்கள் மற்றும் ஒன்றியங்களின் எண்ணிக்கை 86...

  • ஒன்றியங்கள் 12
  • சமர்ப்பிக்கப்பட்ட குழு அறிக்கைகள் 382

 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலம் 2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூடியது முதல் கலைக்கப்பட்ட நாள் வரை 4 ஆண்டுகளும் 1 மாதமும் 4 நாட்களும் ஆகும். இதற்கமைய 5 கூட்டத் தொடர்களைக் கொண்ட இப்பாராளுமன்றம் 390 நாட்கள் கூடியுள்ள ஒன்பதாவது பாராளுமன்ற காலத்தில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய 74 குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் 12 பாராளுமன்ற ஒன்றியங்கள் செயற்பட்டதுடன், அதற்கமைய மொத்தக் குழுக்கள் மற்றும் ஒன்றியங்களின் எண்ணிக்கை 86 ஆகும்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் குழுக்கள் மற்றும் ஒன்றியங்களின் எண்ணிக்கை பின்வருமாறு

சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் விசேட குழுக்கள் சட்டவாக்க நிலையியற் குழு ஒன்றியங்கள் மொத்தம்
16 17 29 11 01 12 86

 

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள்

சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் விசேட குழுக்கள் சட்டவாக்க நிலையியற் குழு மொத்தம்
131 121 96 08 25 382

 

அதற்கமைய, 16 சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் செயற்பட்டதுடன், 131 அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. 16 சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் பின்வருமாறு.

•    தெரிவுக் குழு
•    பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
•    நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
•    சபைக் குழு
•    ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
•    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
•    அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு
•    அரசாங்க நிதி பற்றிய குழு
•    வங்கியியல் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழு
•    பொருளாதார உறுதிப்படுத்தல் குழு
•    வழிவகைகள் பற்றிய குழு
•    பொது மனுக்கள் பற்றிய குழு
•    அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய குழு
•    உயர் பதவிகள் பற்றிய குழு
•    இணைப்புக் குழு
•    பின்வரிசை உறுப்பினர் குழு

17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் பின்வருமாறு;

  • உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • உயர்கல்வி மற்றும் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆய்வு பற்றிய உப குழு
  • ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • சுகாதார அலுவல்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி பற்றிய உப குழு
  • தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
  • வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

 

துறைசார் மேற்பார்வைக் குழுக்கலினால் ஒரு புதிய அங்கமாக சட்டமியற்றும் செயற்பாட்டில் இலங்கையின் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தின. இதன் விளைவாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு குழுக் கூட்டங்களில் செயற்பாட்டு ரீதியாக பங்குபற்றுவதற்கான வாய்ப்பு ஒன்பதாவது பாராளுமன்றக் காலப்பகுதியில் வழங்கப்பட்டது. சட்டமியற்றும் செயல்முறைக்கு புதிய கண்ணோட்டத்தையும் புதிய கருத்துக்களைக் கொண்டு வருவதன் மூலம், கொள்கை வகுத்தல் மற்றும் மேற்பார்வையில் இளைய தலைமுறையினரின் குரல் கேட்கப்படுவதையும் பரிசீலிக்கப்படுவதையும் உறுதிசெய்து, பாராளுமன்றச் செயற்பாட்டிலுள்ள நுணுக்கங்களையும் சிக்கல்களையும் புரிந்து கொள்ள உதவுதல் உள்ளிட்ட சிவில் பொறுப்புகள் மற்றும் நிறுவன இடைத் தொடர்புகள் பற்றிய சிறந்த புரிதலைப் பெறுவதற்கு இடமளித்தல் இதன் நோக்கமாகும்.

அத்துடன், நிலையியற் கட்டளைகளுக்கு அமைய ஒவ்வோர் அமைச்சரவை அமைச்சுக்களுக்கும் ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் இருக்க வேண்டும் என்பதுடன், இதற்கமைய 29 ஆலோசனைக் குழுக்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் செயற்பட்டன.

அதற்கு மேலதிகமாக ஒன்பதாவது பாராளுமன்ற காலப்பகுதியில்;

 

  • இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு
  • தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
  • இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சிகளுக்கான தயார்நிலை (B-READY) சுட்டென்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொ டர்பில் முன்மொழிவுகளையும் வி தப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
  • பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
  • இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
  • இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு
  • அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
  • இலங்கையின் கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்களின் விபத்துக்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
  • நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
  • மாத்தறை மாவட்டத்தில் நில்வளா கங்கை உள்ளிட்ட நீர் மூலங்களின் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து புதிய புனர்நிர்மாண முன்மொழிவுத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான விசேட குழு
  • இலங்கையில் சட்டக் கல்வியின் மீளாய்வு மற்றும் சீர்திருத்தத்திற்கான விதப்புரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

 

 ஆகிய 11 விசேட குழுக்கள் செயற்பட்டதுடன், அவற்றின் பணிகள் நிறைவேற்றப்பட்டு 08 குழுக்கள் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்த 08 அறிக்கைகளும் பின்வருமாறு;

 

  • இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு
  • இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சிகளுக்கான தயார்நி லை (B-READY) சுட்டென்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பி ல் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொ டர்பில் முன்மொழிவுகளையும் வி தப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
  • இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு
  • இலங்கையின் கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்களின் விபத்துக்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
  • நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
  • தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
  • பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
  • இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு

 

 

அத்துடன், பிரதி சபாநாயகர் தலைமை வகிக்கும் சட்டவாக்க நிலையியற் குழு ஒன்பதாவது பாராளுமன்றத்தில், அதன் செயற்பாடுகள் தொடர்பில் 25 அறிக்கைகளை பாரளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளது.



தொடர்புடைய செய்திகள்

2026-06-10

இலங்கையின் தற்போதைய நிதி மற்றும் நாணயமாற்று விகித கொள்கைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் உள்ளிட்ட அதிகாரிகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தினர்

நாணயக் கொள்கை, நாணயாற்று விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு பாராளுமன்றத்தில் இன்று (ஜுன் 10) நடைபெற்றது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் முறைமை, நாணயமாற்று விகிதத்தின் போக்கு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் பராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகள் மற்றும் கருத்துக்களுக்கும் மத்திய வங்கியின் அதிகாரிகள் பதில்களை வழங்கினர்.இந்த நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-09

“பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)”  எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஜுன் 09) பாராளுமன்றத்தில் அறிவித்தார். உயர் நீதிமன்றம் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றலாம் என்று தீர்மானித்துள்ளது. எனினும்  வாசகம்  14 [முன்மொழியப்பட்ட பிரிவு  12 அ(ஆ)] மற்றும் வாசகம்  18 [முன்மொழியப்பட்ட பிரிவுகள் 17அ, 17ஆ மற்றும் 17இ] ஆம் வாசகங்கள்    மட்டும் விதிவிலக்காகும். இந்த வாசகங்கள்  பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். நீதிமன்றம் பரிந்துரைத்தபடி திருத்தப்பட்டால், அவற்றையும் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் அறிவித்தார்.உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய (09) கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென்றும் சபாநாயகர் கட்டளையிட்டார்.


2026-06-08

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்திற்குப் புதிய பதவி தாங்குனர்கள் தெரிவு

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், இலங்கைப் பாராளுமன்றத்தின் குழு அறை 02 இல் அண்மையில் நடைபெற்றது. இதில் 2026 ஆம் ஆண்டிற்கான பதவி தாங்குனர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.இதற்கமைய பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக திரு. பி.எம். ரஸீல்  அவர்களும், உப தலைவராக திரு. எம்.ஐ.எம். பாஸி அவர்களும், செயலாளராக திரு. சி. மணிமாறன் அவர்களும், பொருளாளராக திரு. எம்.ரீ. செய்னுர் ரிஃபா அவர்களும், உதவிச் செயலாளராக செல்வி டி. துலாங்கனி அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக  திரு. எம். மயூரேஷன்  திருமதி. ஏ.ஏ.எஸ். சபாயா  ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பதவி தாங்குனர்கள், பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி திரு. சீ.ஜே. கருணாரத்ன மற்றும் பிரதிப் பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான திரு. ஏ.ஜி.எம். பிக்ரி, திரு. அ. சரவணபவானந்தன்,  திருமதி என்.பி.சி.ஜே. நிஸ்ஸங்க ஆகியோருடன்  குழுப் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டனர்.


2026-06-03

பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 01) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் நிலையியற் கட்டளை 119இன் கீழான தீர்மானம் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.ஜூன் 10ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தச்) சட்டமூலம், நிதி (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறும்.ஜூன் 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் கருமங்களில் பரஸ்பரம் உதவியளித்தில் சட்டத்தின் கீழான கட்டளை என்பன அங்கீகரிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள், குறைநிரப்பு மதிப்பீடு என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. அதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பாக 2026.05.20 அன்று ஆரம்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதம் தொடர்ச்சியாக இரண்டாவது நாள் முன்னெடுக்கப்படும். மேலும், கௌரவ தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் வேண்டுகோளின்படி,  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் தற்போதைய நாணயக் கொள்கை மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  நிகழ்ச்சியொன்றை எதிர்வரும் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது. | Text.privacy_policy

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks