01

E   |   සි   |  

2024-07-12

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கொழும்பில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணி பணிப்பாளர் சபையின் அனுமதி இன்றி 99 வருட குத்தகைக்கு வழங்கிவைப்பு – பணிப்பாளர் சபையின் அனுமதி பெறாத விடயங்களும் குத்தகை ஒப்பந்தத்தில் உள்ளடக்கம் – கோப் குழுவில் வெளிவந்தது

  • நகர அபிவிருத்தி அதிகாரசபையின் சகல முதலீட்டுக் காணிகள் குறித்து அறிக்கை வழங்கவும் – கோப் குழு
  • கொழும்பு குடிசைவாசிகளுக்காக அமைக்கப்பட்ட தொடர்மாடித் தொகுதிகளில் 66 வீடுகள் இன்னமும் காலியாக உள்ளன – 2023 மற்றும் 2024 மே வரையில் இந்த வீடுகளைப் பராமரிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு 600 மில்லியனுக்கும் அதிகமான செலவு – கோப் குழுவில் வெளிவந்தது

 

கொழும்பு 02 ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 06 ஏக்கர் காணி 2019ஆம் ஆண்டு பணிப்பாளர் சபையின் அனுமதி இன்றி 12 பில்லியன் ரூபாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்தது. இந்தக் காணிக்கான குத்தகை ஒப்பந்தம் தயாரிக்கப்படும்போது பணிப்பாளர் சபைக்கு முன்வைப்பட்டு, அனுமதிக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு மேலதிகமாக பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறாது வேறு நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதும் இங்கு புலப்பட்டது. இருந்தபோதும் குறித்த ஒப்பந்தத்தின் வரைபு தொடர்பில் சட்டப் பணிப்பாளருகு்கு எதிராக ஒழுங்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட காணியில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லையென்றும் கோப் குழுவில் வெளிப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன தலைமையில் அண்மையில் (ஜூலை 09) கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலேயே இந்த விடயங்கள் தெரியவந்தன.

மேலும் டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையை அண்டிய பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 2 ஏக்கர் 2 ரூட் மற்றும் 21.4 பேர்ச் காணியை பணிப்பாளர் சபையின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி குத்தகைக்கு வழங்கியதன் காரணமாக அதிகாரசபைக்கு 330 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இந்தச் சம்பவங்கள் தொடர்பான முறையான அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கணக்காய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கணக்குக் கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதிகார சபைக்குச் சொந்தமான முதலீட்டுக் காணிகளின் பெறுமதி மதிப்பீடுகள் குறித்து பிரச்சினை இருப்பதாகவும் தெரிவித்தனர். பாராளுமன்றக் கட்டடத் தொகுதி இருக்கும் காணியின் உரிமை இன்னமும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குக் காணப்படுவதாகவும், இந்த உரிமையைப் பாராளுமன்றத்துக்கு மாற்றிக் கொடுக்குமாறும் ஆலோசனை வழங்கினர். நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்து முதலீட்டு காணிகளின் விபரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் குழுவில் சமர்ப்பிக்குமாறும் கோப் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையானது கொழும்பை சுற்றியுள்ள குடிசைவாழ் மக்களுக்கான நகர மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 48,156 மில்லியன் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி 22 வீட்டுத் திட்டங்களில் 13,602 வீடுகளை நிறைவு செய்துள்ளது. எனினும் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 66 வீடுகள் இன்னும் காலியாக உள்ளதாக கணக்காய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். காலியாக உள்ள வீடுகளின் உரிமையாளர்களை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுத் திட்டங்களில் ஒரு வீட்டுத் திட்டத்திற்கு மாத்திரமே கூட்டு ஆதன முகாமைத்துவ சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக கணக்காய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.  இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை 667.6 மில்லியன் ரூபாவை நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த வீடுகளின் பராமரிப்புக்காக செலுத்தியுள்ளதாக தெரியவந்தது.

இதன்படி வீடுகளின் உரிமை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அந்த வீடுகளை பராமரிக்கும் பொறுப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து நீக்கப்படும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், நாளாந்தம் கொழும்புக்கு வரும் மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பது குறித்தும் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதிகாரசபையினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட 2 வாகன தரிப்பிடங்களின் பணிகள் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டு இதுவரை 230 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.  அதன்படி, இந்த 2 வாகன நிறுத்துமிடங்களும் தற்போதைய நிலையில் பயன்படுத்தப்படும் வகையில் பணிகளை முடிக்க கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்திற்கு, இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தயாசிறி ஜயசேகர,கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ (மேஜர்) சுதர்சன தெனிபிட்டிய, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரேம்நாத் சி. திரு.தொலவத்த ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

12



தொடர்புடைய செய்திகள்

2026-05-26

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட மத்திய மாகாண சபை

2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை அறிக்கை என்பன குறித்து ஆராய்வதற்கு மத்திய மாகாண சபை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது.அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 22) கூடியபோதே மத்திய மாகாணசபை அழைக்கப்பட்டிருந்தது.2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வினவியபோது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ஆவணங்கள் அழிக்கப்பட்ட விடயம் கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றமும் ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவின் தலைவர், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும், கடிதங்களையும் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மத்திய மாகாண சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், சட்டவிரோதமாக குத்தகை விதிகளை மீறும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வாடிவீட்டை மூன்றாவது தரப்பிற்குப் பெற்றுக் கொடுத்த சம்பவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுத்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது விடயத்தில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மத்திய மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, பயணிகள் போக்குவரத்து சேவை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நிறுவனங்களுக்குள் நடைபெற்று வரும் விசாரணைகளை விரைவாக முடிப்பதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்க நிறுவனம் இலாபம் ஈட்டினாலும், அந்த இலாபம் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அந்த வருமானம் நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ருவன்தில ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, சுனில் ரத்னசிறி, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரத்ன, அஜந்த கம்மெத்தெகே, சானக மாதுகொட, ரி.கே.ஜயசுந்தரன, லால் பிரேமநாத் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-05-26

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட குழுவுக்கு விளக்கம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது.இந்த விசேட அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டரீதியான தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மாகாண சபைத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுனஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (ஜனாதிபதி சட்டத்தரணி) நிசாம் காரியப்பர் அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.


2026-05-25

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (மே 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவ இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், கௌரவ உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.


2026-05-25

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.குறித்த மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (மே 19) கூடிய போதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குழுவுக்கு விளக்கமளித்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks