பார்க்க

E   |   සි   |  

2024-02-22

செய்தி வகைகள் : செய்திகள் 

கௌரவ சபாநாயகரின் அறிவிப்பு - 2024.02.22

குழுக்கள் சிலவற்றுக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள பெயர்களுக்கு அமைய உறுப்பினர்கள் நியமனம்

பாராளுமன்றத்தினால் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம்,  ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் குழுக்களில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (22) சபையில் சமர்ப்பித்தார். இதற்கமைய இதுவரை கிடைக்கப்பெற்ற பெயர்களுக்கு அமைய அந்தந்தக் குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரம் வருமாறு;

ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
•    கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி
•    கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ
•    கௌரவ விஜித பேருகொட
•    கௌரவ தாரக்க பாலசூரிய
•    கௌரவ அநுராத ஜயரத்ன
•    கௌரவ சமல் ராஜபக்ஷ
•    கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
•    கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே
•    கௌரவ ஜயந்த கெட்டகொட
•    கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே
•    கௌரவ சமன்பிரிய ஹேரத்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய  குழு
•    கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா
•    கௌரவ லசந்த அலகியவன்ன
•    கௌரவ பிரசன்ன ரணவீர
•    கௌரவ கே. காதர் மஸ்தான்
•    கௌரவ (திருமதி) டயனா கமகே
•    கௌரவ சாமர சம்பத் தசனாயக
•    கௌரவ வஜிர அபேவர்தன
•    கௌரவ ஏ. எல். எம். அதாஉல்லா
•    கௌரவ விமலவீர திசாநாயக்க
•    கௌரவ ஜயந்த கெட்டகொட
•    கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட
•    கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு
•    கௌரவ இசுரு தொடன்கொட
•    கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த
•    கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி
•    கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான
•    கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே
•    கௌரவ டீ. வீரசிங்க
•    கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக

அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய  குழு
•    கௌரவ ஜகத் புஷ்பகுமார
•    கௌரவ ஜானக வக்கும்புர
•    கௌரவ லொஹான் ரத்வத்தே
•    கௌரவ இந்திக அனுருத்த ஹேரத்
•    கௌரவ சாந்த பண்டார
•    கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே
•    கௌரவ துமிந்த திசாநாயக்க
•    கௌரவ ரோஹித அபேகுணவர்தன
•    கௌரவ நிமல் லான்சா
•    கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர
•    கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன
•    கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி
•    கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய
•    கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த
•    கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ
•    கௌரவ எம். ராமேஷ்வரன்
•    கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ
•    கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே
•    கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார

பொது மனுக்கள் பற்றிய  குழு
•    கௌரவ ஜகத் புஷ்பகுமார
•    கௌரவ ச. வியாழேந்திரன்
•    கௌரவ அசோக்க பிரியந்த
•    கௌரவ அ. அரவிந்த் குமார்
•    கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ
•    கௌரவ காமினி லொக்குகே
•    கௌரவ வஜிர அபேவர்தன
•    கௌரவ (டாக்டர்) கயாஷான் நவனந்த
•    கௌரவ ஜயந்த கெட்டகொட
•    கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர
•    கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்
•    கௌரவ நிபுண ரணவக
•    கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ
•    கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான
•    கௌரவ யதாமிணீ குணவர்தன

பாதுகாப்பு  அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர
•    கௌரவ சமல் ராஜபக்ச
•    கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே
•    கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான
•    கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி
•    கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ
•    கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக

முதலீட்டு மேம்பாடு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ அ. அரவிந்த் குமார்
•    கௌரவ தம்மிக்க பெரேரா
•    கௌரவ யதாமிணீ குணவர்தன

கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ அனுப பஸ்குவல்
•    கௌரவ விமலவீர திசாநாயக்க
•    கௌரவ குணதிலக ராஜபக்ஷ

வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ எஸ். எம். எம். முஸ்ஸாரப்
•    கௌரவ ஜயந்த கெட்டகொட
•    கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன

சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ கனக ஹேரத்
•    கௌரவ (டாக்டர்) கயாஷான் நவனந்த
•    கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட

கமத்தொழில் அலுவல்கள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ உதயகாந்த குணதிலக்க
•    கௌரவ குலசிங்கம் திலீபன்
•    கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ச

வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ சாமர சம்பத் தசனாயக
•    கௌரவ கபில அதுகோரல
•    கௌரவ குமாரசிறி ரத்னாயக்க

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி
•    கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த
•    கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம்

கைத்தொழில் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ பிரேமலால் ஜயசேக்கர
•    கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர
•    கௌரவ லலித் வர்ண குமார

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன
•    கௌரவ மிலான் ஜயதிலக்க
•    கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே

வெளிநாட்டலுவல்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ எஸ். பீ. திசாநாயக்க
•    கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ச
•    கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ எச். நந்தசேன
•    கௌரவ குணதிலக ராஜபக்ஷ
•    கௌரவ சமன்பிரிய ஹேரத்

மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ காமினி லொக்குகே
•    கௌரவ துமிந்த திசாநாயக்க
•    கௌரவ நாலக பண்டார கோட்டேகொட

சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ எஸ்.எம். சந்திரசேன
•    கௌரவ இசுரு தொடன்கொட
•    கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்
•    கௌரவ மிலான் ஜயதிலக்க
•    கௌரவ டீ. வீரசிங்க

நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ டீ. வீரசிங்க
•    கௌரவ யதாமிணீ குணவர்தன
•    கௌரவ ஜகத் சமரவிக்ரம

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ டீ. பி. ஹேரத்
•    கௌரவ ஜோன் செனவிரத்ன
•    கௌரவ சனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க

அரச பெருந்தோட்டக் தொழில்முயற்சி மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
•    கௌரவ சம்பத் அதுகோரல
•    கௌரவ திஸகுட்டி ஆரச்சி
•    கௌரவ எம். ராமேஷ்வரன்



தொடர்புடைய செய்திகள்

2026-09-09

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (செப். 09) நிறைவேற்றப்பட்டது.குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் முற்பகல் 11.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.இச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவியை அறிமுகப்படுத்திய 2009ஆம் ஆண்டின் 35ஆம் ஆண்டு இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமைதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின் மூலம், அக்காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.இதற்கு அமைய, குறித்த சட்டமூலத்தின் மூலம் 2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டம் நீக்கப்படுவதுடன், குறித்த உதவியும் இரத்துச் செய்யப்படவுள்ளது.மேலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதுடன், பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்படும்.


2026-09-09

50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இயந்திரங்களை அகற்றி நவீன தொழில்நுட்பத்துடன் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்த திட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய மற்றும் காலாவதியான இயந்திர உபகரணங்களைப் படிப்படியாக அகற்றி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வினைத்திறன்மிக்க உபகரணங்களைக் கொள்வனவு செய்வதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு உயர் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அச்சிடும் (Smart Security Printing) திறன்களைக் கொண்ட நவீன அச்சிடும் பிரிவொன்றை நிறுவுவதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.வாய்மூல விடைக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.டி. சூரியபண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் 445 நிரந்தரப் பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் மேலும் 21 பணியாளர்களும் பணியாற்றுவதாக பிரதமர் தெரிவித்தார்.பாதுக்கை, வட்டரெக்க பிரதேசத்தில் இயங்கி வரும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் அச்சகத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப பாடசாலைப் பாடப்புத்தகங்கள் மற்றும் தொகுதிகள் அச்சிடப்படுவதுடன், பாதுகாப்பு அச்சிடும் பணிகளான மாகாணப் பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடுதல், லொத்தர் சீட்டுகள் அச்சிடுதல் மற்றும் இரகசிய ஆவணங்களை அச்சிடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.அத்துடன், SPC பயிற்சிப் புத்தகங்கள் அச்சிடுதல், பல்வேறு அரச நிறுவனங்களுக்கான அச்சிடும் பணிகள், ஏனைய வர்த்தக அச்சிடும் பணிகள், தனியார் அச்சிடும் கட்டளைகள் மற்றும் தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், நாட்டின் பல மாவட்டங்களில் SPC விற்பனை நிலையங்களின் வலையமைப்பொன்றும் பராமரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.அமைச்சின் கீழ் அச்சகம் ஒன்று காணப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.அதற்கமைய, சந்தை விலைகளைக் கட்டுப்படுத்தும் காரணியாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல், சந்தையின் தரம் மற்றும் தரநிலைகளைக் கட்டுப்படுத்துதல், நம்பகமான பாதுகாப்பு அச்சிடும் (Security Printing) பிரிவொன்றின் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் அரச துறையின் ஒரேயொரு அரச தொழில்முயற்சி நிறுவனமாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல் ஆகியவை அவற்றில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.பாரிய அளவிலான அச்சிடும் தேவையைப் பூர்த்தி செய்தல், அரசுக்குச் சொந்தமான அச்சிடும் வசதியொன்றின் தேவையை நிறைவேற்றுதல் மற்றும் அச்சிடும் பணிகளுக்காக ஏற்படும் செலவுகளைக் குறைத்தல் ஆகியவையும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் அடங்குவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், நீண்ட காலமாக அரச நிறுவனமாக இயங்கி வருவதன் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குதல், பயிற்சியளிக்கப்பட்ட மனித வளத்தைக் கொண்டிருத்தல் மற்றும் அரசாங்கத்தின் பங்காக அரசுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துதல் ஆகியவையும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் இயங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.


2026-09-08

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.09.08

“இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (செப். 8) அறிவித்தார். உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வருமாறு,சட்டமூலத்தின் வாசகம் 3(ஐ) தெளிவற்றதாக உள்ளது, எனவே இது அரசியலமைப்பின்12(1) மற்றும் 14(1) (எ) ஆம் உறுப்புரைகளுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த வாசகம் நீக்கப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(i)     சட்டமூலத்தின் வாசகம் 4(ச), அரசியலமைப்பின் உறுப்புரைகள் 12(1) மற்றும் 14(1)(எ) உடன் முரண்படுகிறது மற்றும் அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றம் முன்மொழிந்தபடி உறுப்புரையின் அந்த வாசகம் திருத்தப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(ii)     சட்டமூலத்தின் வாசகம் 5(4)(ஆ) அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) உடன் முரண்படுகிறது மற்றும் அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்டபடி வாசகம் 5 திருத்தப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(iii)     சட்ட மூலத்தின் மற்ற வாசகங்கள் அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை என்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள்2026 ஆகஸ்ட் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளிலான அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஒன்பது மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள மனுக்களின் பிரதிகளும் கிடைக்கப்பெற்றிருப்பதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.2026 ஆகஸ்ட் 21 திகதியன்று மனுக்கள் ஏழு 2026 ஆகஸ்ட் 24  திகதியன்று மனுக்கள் நான்கு 2026 ஆகஸ்ட் 25 திகதியன்று மனுக்கள் எட்டு 2026 ஆகஸ்ட் 28 திகதியன்று மனுக்கள் ஐந்து 2026 ஆகஸ்ட் 31 திகதியன்று மனுக்கள் முப்பத்து ஒன்று 2026 செப்டம்பர் 01 திகதியன்று மனுக்கள் பத்து 2026 செப்டம்பர் 03 திகதியன்று மனுக்கள் மூன்று2026 செப்டம்பர் 04 திகதியன்று மனுக்கள் இரண்டு  கிடைக்கப்பெற்றிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார். “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு பதினைந்து மனுக்கள்அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பதினைந்து மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் சபையில் அறிவித்தார்.நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்திற்கு மேலும் ஏழு மனுக்கள்2026 ஆகஸ்ட் 19 ஆம் திகதிய எனது அறிவித்தலில்  குறிப்பிடப்பட்ட மனுவுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் ஏழு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.


2026-09-08

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (செப். 8) சான்றுரைப்படுத்தினார்.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தைத் திருத்துவதற்கான இச்சட்டமூலம் கௌரவ தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் தொடர்பில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகளை தற்போதைய நிலைமைக்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பதே இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் கீழ் 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கக்கூடிய அபராதத் தொகைகள் தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப போதுமானதாக இல்லாத காரணத்தினால், அவ்வபராதத் தொகை ரூ.10,000 இலிருந்து ரூ.100,000 வரை இத்திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல்  (திருத்தச்) சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks