logo

E   |   සි   |  

2009-12-18

செய்தி வகைகள் : செய்திகள் 

தியவன்னா இனிய நத்தார் கீதங்கள் - 2009

வருடாந்த நத்தார் நிகழ்ச்சி கெளரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 2009 டிசெம்பர் 23 ஆம் திகதியன்று ஆறாவது தடவையாகவும் நடத்தப்படவுள்ளது. அன்று மாலைப்பொழுது மத வழிபாட்டுடன் ஆரம்பமாவதோடு பின்னர் திறந்த வெளியில் நடத்தப்படவுள்ள நத்தார் கீதங்கள் நிகழ்ச்சி ஆரம்பமாகும். இந் நிகழ்வில் கொழும்பு அதிமேற்றாணியார் அதிவந்தனைக்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் அடிகளார் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

மர்ஸலின் ஜயகொடி அடிகளாரால் இசைக்கப்படவுள்ள பக்திப்பாடலில் பாராளுமன்ற பணியாள் தொகுதி உறுப்பினர்களின் பிள்ளைகளை உள்ளடக்கிய பாடல் குழு தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் கலந்து கொள்ளவுள்ளது.

பாராளுமன்ற பணியாள் தொகுதியினர், மத அலுவல்கள் மற்றும் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சு மற்றும் மக்கள் தொடர்பாடல், தகவல் அமைச்சு என்பனவற்றினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.

அன்றைய மாலைப்பொழுதிற்கான நிகழ்ச்சி நிரல்:-
  • வழிபாட்டுக்கான அறிமுகம் - வண. தந்தை பெனடிக் ஜோசப் அடிகளார்
  • கெளரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்திற்கு முன்பாக பேராயர் அவர்கள் ஆசி நீர்த்தெளித்து ஆசி வழங்கல்
  • ஆரம்ப பவனி - புனித மரியாள் தேவாயலம், தெஹிவளை
  • வழிபாட்டின் ஆரம்பம்
  • வருகைப் பாடலுக்கான அறிமுகம்
  • வருகைப் பாடல் - திரு லோரன்ஸ் மார்டின், திரு சுனில் சாந்த வர்ணகுலசூரிய உள்ளிட்ட குழுவினர்
  • முதலாவது வாசகமும் அறிமுகமும். (சிங்களம்/தமிழ் மொழிகளில்)
  • இரண்டாவது பாடலுக்கான அறிமுகம். (சிங்களம்)
  • தமிழ் பாடல் - இலங்கைத் திருச்சபையின் மருதானை எமானுவேல் ஞாபகார்த்த தேவாலய பாடல் குழு
  • நற்செய்தி வாசகமும் அறிமுகமும் (சிங்களம்) வண. தந்தை சமன் மெக்ஷிமஸ் அடிகளார்
  • பாலனின் குடிலைக் கொண்டு செல்லல் - புனித மரியாள் தேவாலயம், தெஹிவளை
  • இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தல்
  • அதிவந்தனைக்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்களை இறை வேண்டலுக்காக அழைத்தலும் அதைத்தொடர்ந்து பேராயரின் இறைவேண்டலும் ஆசியும்
  • "தியவன்னா நத்தார் கீதங்கள் 2009" என்ற பெயரில் எழுதப்பட்ட சிறப்பு மலரை கெளரவ சபாநாயகர் அவர்கள் முன்னாள் பேராயர் அதி வண. ஒஸ்வல்ட் கோமிஸ் அவர்களுக்கு வழங்குதலும் அதைத்தொடர்ந்து முன்னாள் பேராயர் அவர்கள் அம்மலரை அதிவந்தனைக்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்களுக்கு வழங்குதலும்
  • வழிபாட்டு நிறைவு

- பக்திப் பாடல் ஆரம்பம் -

  • நத்தார் பக்திப் பாடல் - திருமதி நிரோசா விராஜினி
  • நத்தார் பக்திப் பாடல் - பாராளுமன்ற பணிக்குழு அங்கத்தவர்களின் பிள்ளைகளை உள்ளடக்கிய பாடல் குழு
  • நத்தார் பக்திப் பாடல் - வ/ப லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் பக்திப் பாடல் குழு
  • நத்தார் பக்திப் பாடல் - தெஹிவளை புனித மரியாள் தேவாலயத்தின் பக்திப் பாடல் குழு
  • நத்தார் பக்திப் பாடல் - திருமதி ரெஜிணி செல்வநாயகம் "சாமர" கலைக் கல்லூரி
  • நத்தார் பக்திப் பாடல் - போலவத்தை பக்திப் பாடல் குழு (தமிழ்)
  • நத்தார் பக்திப் பாடல் - குருபேவில இளைஞர் மன்றம்
  • நத்தார் பக்திப் பாடல் - பாடகர் திரு ரஜீவ் செபஸ்தியன்
  • நத்தார் பக்திப் பாடல் - இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்தின் பக்திப் பாடல் குழு
  • நத்தார் பக்திப் பாடல் - பாடகர் திரு. அனில் பாரதி
  • நிறைவு.


தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks