E   |   සි   |  

2021-11-25

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்றத்தை ஆரஞ்சு ஆக்குதல் – பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டியத்தின் உலகளாவிய இயக்கத்துடன் இலங்கை பாராளுமன்றம் ஒருமைப்பாட்டுடன் நிற்கின்றது

“பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) என்பது பாலினக் கலைச்சொற்களில் கிட்டத்தட்ட அலுத்துப்போன சொல் ஒன்றாக மாறிவிட்டது. நாங்கள் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசினோம், அது உண்மையில் அதன் சாரத்தை இழந்துவிட்டது. ஆனால், அது வெறும் சொல் அல்ல. இது உலகிலும் இலங்கையிலும் முற்றிலும் கசப்பான உண்மையாகும்” என்றார் கோவிட்19 கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதாரம் மற்றும் தொற்றுநோய்களுக்கான இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே.

புள்ளிவிவரங்கள் ஒரு பாதி உண்மையை மட்டுமே தெரிவிக்க முடியும், ஆனால் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்பது பெறுமதியானது. இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (VAW) பற்றிய முதலாவது அர்ப்பணிக்கப்பட்ட தேசிய கணக்கெடுப்பான பெண்கள் மற்றும் நல்வாழ்வு கணக்கெடுப்பு 2019ஆனது, இலங்கைப் பெண்களில் நான்கில் ஒரு பெண் உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளை அனுபவித்துள்ளதாக தெரிவிக்கின்றது. கிட்டத்தட்ட 40 சதவீத பெண்கள் உடல், பாலியல், மன ரீதியான மற்றும்/அல்லது பொருளாதார வன்முறை மற்றும்/அல்லது துணையினால்; கட்டுப்படுத்தப்படும் நடத்தைகளுக்கு ஆளாகியுள்ளனர். தோட்டத் துறையில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிலைமைகள் மிகவும் மோசமானவை என்பதை கணக்கெடுப்பானது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. உடல் மற்றும் பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் ஒரே சமயத்தில் இடம்பெற்றுள்ளதையும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை திரும்பத் திரும்ப நடந்துள்ளதையும் அறிக்கை உறுதிப்படுத்துகின்றது. உதாரணமாக, உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்ட பெண்களில் 65 சதவீதம் பேர், தாங்கள் இந்த வன்முறையை இரண்டு முதல் மூன்று முறை சந்தித்துள்ளதாகவும், மற்றும் 32 சதவீதம் பேர் ஐந்து முறைக்கு மேல் உடலுறவு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். துணை அல்லாதவர்களை விட நெருக்கமான துணைகளே உடல் ரீதியான வன்முறையைத் தூண்டுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

VAW இனால் பாதிக்கப்பட்ட பெண்களில் நீண்ட கால உடல் மற்றும் மனநல பாதிப்புகள் முக்கியமாக பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறையால் தொடர்ந்தும் காயம் அடைந்துள்ளதாகவும், 20 சதவீதம் பேர் காயங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர். துணை ஒருவரினால் பாலியல் வன்முறைக்கு ஆளான பாதிக்கப்பட்டவர்களில் அரைவாசி பேர் அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையின் தாக்கத்தை “அதிகளவு” என்று மதிப்பிட்டுள்ளனர். அதேவேளை மற்றொரு 30 சதவிகிதத்தினர் அதை “சிறிதளவு” என்று மதிப்பிட்டுள்ளனர்.

கோவிட் 19 ஆனது இலங்கையிலும் மற்றும் உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறைகளின் அளவை மட்டுமே மோசமாக்கியது, இது மீண்டும் மீண்டும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட பாலின ஒப்புறவு மற்றும் சமத்துவம் தொடர்பான விஷேட தெரிவுக்குழு ஒன்று GBV இனையும் ஆராய்ந்து, மற்றும் பாலின ஒப்புறவு மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பாராளுமன்றத்திற்கு வழங்குவதுடன், இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துகின்றது. கௌரவ பெர்னாண்டோபுள்ளே தலைமையிலான குழு சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்துடன் கைகோர்த்து பாலின ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை அவர்களின் பிரதிநிதித்துவ மற்றும் மேற்பார்வை ஆணைகளைப் பயன்படுத்திக் குறைப்பதற்காகப் பணிபுரிகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களின் செயற்பாட்டியத்தை உலகானது குறிக்கும் நிலையில், இந்த ஆண்டும் மனித உரிமைகள் தினமாக ஐநா பொதுச் செயலாளரின் UNiTE பிரச்சாரம் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் உலகளாவியக் கருப்பொருள் “ஆரஞ்சு தி வேர்ல்ட் – பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே ஒழிக்கவும்!” ஆகும்.

தெரிவுக்குழுவின் கூட்டு முயற்சியாக இன்று (நவம்பர் 25) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரஞ்சு நிறத்தை அணிந்து பாராளுமன்றத்தை ஆரஞ்சு ஆக்குவதனால், இலங்கை பாராளுமன்றமானது உலகளாவிய இயக்கத்துடன் ஒருமைப்பாட்டுடன் நின்று உலகளாவிய கருப்பொருளுடன் ஒன்றிணைகின்றது.

முறைசாரா துறையில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய வன்முறையின் வடிவங்களை வலியுறுத்தி, கௌரவ. டயானா கமகே, தெரிவுக்குழுவின் உறுப்பினர், 11 நவம்பர் 2021 அன்று பாராளுமன்றத்தில், “பெண்கள் அனுபவிக்க வேண்டிய பாகுபாடு காரணமாக, அவர்கள் பாதுகாப்பற்ற வேலைகளில் முடிவடைகின்றனர். பாகுபாடு காரணமாக அவர்கள் பல துன்புறுத்தல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இது பாலியல் துன்புறுத்தல், மனரீதியான துன்புறுத்தல் மற்றும் சில சந்தர்ப்பங்களில், உடல்ரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம். எனவே, அதை மாற்ற வேண்டும்” என்றார்.

தெரிவுக்குழுவின் உறுப்பினரும், பாலினம் மற்றும் உள்ளடக்கல் செயல்வீரருமான கௌரவ. எரான் விக்ரமரத்ன குறிப்பிடுகையில், “ஒரு சமூகமாக நாம் பெண்களையும் மற்றும் அனைத்து மனிதர்களையும் மரியாதையுடன் நடாத்த வேண்டிய தருணம் இது! GBV ஆனது உலகம் முழுவதும் உள்ளது. ஆனால் அதனைத் தவிர்க்க முடியாத நிகழ்வொன்றாக இயல்பாக்கக் கூடாது. மக்களிடம் மனப்பான்மை மாற்றம் எமக்கு வேண்டும். பலம் வாய்ந்தவர்களின் கோபத்துக்கும் விரக்திக்கும் ஆளாவதற்கு பெண்கள் இல்லை! பெண்கள் பாதிப்பிற்குள்ளாக்கப்படக்கூடியர்கள் இல்லை! இன்று பெரும்பாலான பெண்கள் குடும்ப நிதிக்கு பங்களிப்புச் செய்கின்றார்கள். அவ்வாறு இல்லையென்றாலும் பெண்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றார்கள். ஒரு நாடாக, ஒரு தேசமாக நாம் அறிக்கையிடப்படும் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்து வெட்கப்பட வேண்டும். எல்லா வடிவங்களிலும் GBV இனைத் தடுக்க நாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.”

மேலும், கௌரவ. ரோஹினி குமாரி கவிரத்ன, பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக இலங்கைப் பாராளுமன்றத்தில் வலுவான குரல் எழுப்பும் மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் துணைத் தலைவி கூறுகையில், “பெண்கள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, சமூகத்தில் உள்ள அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்! பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமாகவும் மற்றும் தெரிவுக்குழுவாகவும் நாங்கள் இதற்காகவே பாடுபடுகின்றோம். பெண்களின் உரிமைகளை மீறும் மக்களின் வெட்கக்கேடான செயல்கள் மற்றும் பேச்சுக்களுக்கு எதிராக, குறிப்பாக பல்வேறு வடிவங்களிலான பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக நிற்பதற்கு எனது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஆதரவை நான் கேட்டுக்கொள்கின்றேன்.”

“இன்று இலங்கையின் பாராளுமன்றம் என்ற வகையில் நாம் செய்வது வெறும் அடையாள நடவடிக்கை அல்ல. மாறாக, இது GBV மற்றும் VAW என்பவற்றுக்கு எதிராக நிற்கும் பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் உள்ளது என்பதை உணர்த்தி சமூகத்தை விழிக்கச் செய்வதே ஆகும்” என்று கௌரவ. பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார். அத்துடன் இந்த சிறிய தீவான தேசத்திலும் மற்றும் அதற்கு அப்பாலும் GBV இனை அகற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

 

wc



தொடர்புடைய செய்திகள்

2026-09-01

அனைத்துப் பாராளுமன்ற சபாநாயகர்களின் இரண்டாவது மாநாடு கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரில்

கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரிலுள்ள GDT மாநாட்டு மண்டபத்தில் 2026 ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்ற இரண்டாவது அனைத்து பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.கம்போடியாவின் செனட் சபை மற்றும் தேசிய பேரவை  ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாடு, ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஓசியானியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு  பிராந்தியங்களைச் சேர்ந்த சட்டவாக்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது. “சமாதானம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பிற்குமான ஒருமைப்பாடு: சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்தல்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.கம்போடிய அரச மாளிகையில் அந்நாட்டின் மன்னர் அதிமேதகு ‘Preah Samdech Preah Boromneath Norodom Sihamoni’ அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து மாநாட்டின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன்போது, ISC-2 மாநாட்டின் தலைவரும் கம்போடிய செனட் சபையின் தலைவருமான கௌரவ ‘Samdech Akka Moha Sena Padei Techo Hun Sen’ அவர்களுடனான சுமூகமான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கம்போடிய பிரதமர் கௌரவ ‘Samdech Mohaborvor Thipadei Hun Manet’ அவர்களுடனும் சுமூகமான சந்திப்பொன்று இடம்பெற்றது.இந்த மாநாட்டில் பிரதான உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பாரம்பரிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் வலுவானதுமான பங்களிப்பாக அமையும் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் சட்டவாக்க நிறுவனங்கள் தனித்துவமான பங்கை வகிக்க வேண்டும் என்றும், கடுமையான அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவும் சந்தர்ப்பங்களிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக தொடர்பாடல் வழிகளைத் திறந்த நிலையில் பேண வேண்டும் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். மேலும், உண்மையானதும் நிலையானதுமான சமாதானம் என்பது போர் இல்லாத நிலையை மாத்திரம் குறிப்பிடுவதாக அமையாது என்றும், அவ்வாறான சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு பிரஜையும் புறக்கணிக்கப்படாத அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் தொடர்பிலும் கவனம் செலுத்திய கௌரவ சபாநாயகர், அணிசேராக் கொள்கை, நட்புறவு மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் வரலாற்று ரீதியான வெளிநாட்டுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார். காலநிலை மாற்றம், இணையக் குற்றங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நவீன சவால்களை எந்தவொரு நாடும் தனித்து தீர்க்க முடியாது என்றும், அவற்றை எதிர்கொள்வதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். உலகளாவிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதன் மூலம் பரந்தளவிலான சமூக நீதியையும் பகிரப்பட்ட பொருளாதார செழிப்பையும் அடைந்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.கம்போடியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில், இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மில்டன் டிக் அவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.பாராளுமன்ற அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், மேலும் அதிகரித்த தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.அத்துடன், கௌரவ சபாநாயகர் விக்கிரமரத்ன அவர்கள் நேபாள தேசிய பேரவையின் தலைவர் கௌரவ நாராயண் பிரசாத் தஹால் அவர்களையும் சந்தித்தார். இதன்போது, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.மாநாட்டின் நிறைவில் “நோம் பென் பிரகடனம்” (Phnom Penh Declaration) உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த சட்டவாக்கக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவது இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.


2026-08-28

பாராளுமன்றம் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது

பாராளுமன்றம் செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (ஆக. 20) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டன.இதற்கு அமைய செப்டெம்பர் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரண்டு ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.அதன் பின்னர், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 09ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை, .ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பெண்களின் வலுவூட்டல் சட்த்தின் கீழான தீர்மானத்தை அங்கீகரிப்பதற்கான விவாதம் இடம்பெறும்.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 11 வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைநலீன் பண்டார ஜயமஹபெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுக்ள ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவருதல்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்இலங்கை பைத்துல்மால் நிதியம் என்ற பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்தல்அஜித் பி.பெரேராஇலங்கை குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல்ஹர்ஷ.த சில்வாதியகம வனத்தைப் பாதுகாத்தல்சுஜீவ திசாநாயக்கபிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்ததல்நந்த பண்டாரமலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல்ரீ.கே.ஜயசுந்தரகித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல்இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


2026-08-28

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் புதுடில்லியில் ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பு

இலங்கை பாராளுமன்றத்தின் ஒன்பது  திணைக்களங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அதிகாரிகள் 25 பேர் கொண்ட குழுவினர், புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றமான லோக்சபா செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. லோக்சபாவின் கௌரவ சபாநாயகர்   ஸ்ரீ ஓம்  பிர்லா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், லோக்சபா செயலகத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீ உத்பல் குமார் சிங் அவர்களால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பின் பயனாக, இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி திட்டத்தில் முதல் தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற  அதிகாரிகள் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இக்குழுவுக்கு இலங்கை  பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தலைமை தாங்கினார். இரண்டாவது தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் தலைமையில், தற்போது புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.இரு கட்டங்களாக நடத்தப்படும் இத்திட்டங்களும் லோக்சபா செயலகத்தின் ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. பாராளுமன்ற அதிகாரிகளின் தொழில்சார் அறிவு, திறன்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் முனையத்தை வந்தடைந்த இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் குழுவை, லோக்சபா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.ஆரம்ப தினத்தன்று இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவினர், இந்திய பாராளுமன்ற கட்டட வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.ஆளுமை விருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற நிர்வாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான பரந்தளவிலான விடயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.  சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், பாராளுமன்றத்திற்கான நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல், பாராளுமன்றக் குழுக்களின் பங்கு மற்றும் பணிகள், லோக்சபா செயலகத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் நிர்வாகப் பிரிவின் செயற்பாடுகள் ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இதில் அடங்குகின்றன.மேலும், பாராளுமன்ற குழுச் செயலகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் செயற்பாடு மற்றும் நிர்வாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கநெறிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவைகள், கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்படுகிறது.செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், ஒருங்கிணைந்த நிதிப் பிரிவின் (IFU) பணிகள், வரவுசெலவு மற்றும் கொடுப்பனவுக் (B&P) கிளை, அத்துடன் சட்டவாக்க மன்றங்களின் தலைமைதாங்கும் அதிகாரிகளின் பங்கு மற்றும் அதிகாரங்கள் ஆகியவை பற்றிய கலந்துரையாடல்களும் இதில் அடங்கியுள்ளன.இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இந்திய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.இதன் மூலம் இந்திய பாராளுமன்ற உட்கட்டமைப்பு மற்றும் ஆதரவுச் சேவைகள் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.கல்வி மற்றும் நிறுவன ரீதியான பயிற்சி அமர்வுகளுக்கு மேலதிகமாக, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்ராவிற்கான கலாசார விஜயமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் இரு பாராளுமன்றங்களின் அதிகாரிகளும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், பாராளுமன்ற நடைமுறைகள், நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் தொடர்பான ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர்.இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம், தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சன்சத் தொலைக்காட்சி நிலையத்திற்கு விஜயம் செய்து அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.தொடர்ச்சியான தொகுதிகளாக இரு நாட்டு பாராளுமன்ற செயலகள்க்கு இடையிலான வளர்ந்து வரும் நிறுவன ரீதியான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் பாராளுமன்ற நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.


2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks