பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2020-12-07
செய்தி வகைகள் : குழு செய்திகள்
நாட்டின் கிராமப்புற மக்களின் உண்மையான தேவைகளையும் முன்னுரிமைகளையும் அடையாளம் காணும் பொருட்டு புதிய திட்டமான ''வேலையோடு மீண்டும் கிராமத்திற்கு'' (வெட சமக யலி கமட) செயற்திட்டத்தை 14 ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) தெரிவித்தார். நிதி அமைச்சின் ஆலோசனைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய பிரதமர், இந்தத் திட்டத்தை முறையாக அடையாளம் கண்டு கிராமப்புற மற்றும் புறநகர்ப்புறங்களில் உள்ள மக்களின் உண்மையான தேவைகளை அடையாளம் கண்டு குறித்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இக்குழுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், கிராமப்புற மற்றும் புறநகர்ப்புறங்களில் உள்ள 72% இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதோடு அதிகாரத்துவத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் முன்னுரிமைகளுக்கு அவசியம் அளிக்கப்பட வேண்டும் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாராவின் பரிந்துரைக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இதன்போது நிதி அமைச்சு மற்றும் திரைச்சேரியின் செயலாளர் எஸ். ஆர். ஆர்ட்டிகல குறிப்பிடும்போது, சம்பந்தப்பட்ட இடங்கள் தொடர்பாக அரசு நிறுவனங்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு காணப்பட வேண்டும் என்றார். இதன்படி, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் உதவியுடன் முன்னுரிமைகள் பட்டியலைத் தயாரிக்க அமைச்சின் செயலாளர் இதன்போது ஒப்புக்கொண்டார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக நாட்டில் சுற்றுலாத்துறை பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால் நிதி அமைச்சு விரைவில் குறித்த விடயத்திற்கு உதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். குறித்த விடயம்தொடர்பாக நிதி அமைச்சு எடுத்த பல நடவடிக்கைகளை இதன்போது அமைச்சின் செயலாளர் குழுவிற்கு விளக்கினார்.
கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, ஓய்வூதிய முரண்பாடுகள் மற்றும் சமுர்த்தி அதிகாரிகளை தேர்தலுக்கு வேட்புமனுக்களை வழங்குவது தொடர்பான சிக்கலான சூழ்நிலையை சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேர்தலுக்கு சமுர்த்தி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக நிதி அமைச்சர் மற்றும் கமத்தொழில் அமைச்சருடன் இணைந்து அமைச்சரவை அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும் என்றும், விரைவில் குறித்த பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் இதன்போது ஓய்வூதியம் தொடர்பில் கேள்வியெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார அவர்களின் கருத்துக்கு பதிலளித்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்காக மட்டும் 1.1 டிரில்லியன் டொலர் ஒதுக்கப்படுகின்றது என்றார். வரவுசெலவுத்திட்டத்தின்படி, 50,000 புதிய பட்டதாரிகள் பொது சேவைக்கு சேர்க்கப்படுவதோடு, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் 35,000 ரூபா சம்பளம் பெறும் 100,000 இளைஞர்களின் சம்பளமும் இதில் உள்ளீர்க்கப்பட வேண்டுமென்று இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எந்தவொரு அரசாங்கமும் தனது நிதியை நிர்வகிக்க இது ஒரு கடினமான சந்தர்ப்பமாகும் என்றும் ஆனாலும் நிதியமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் இந்த சூழ்நிலையை முறையாக நிர்வகிக் கடும் பிரயயத்தனங்களை மேற்கொள்கின்றனர் என்றார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பமான நிதியமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், அமைச்சர் காமினி லொக்குகே, இராஜாங் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் குமார, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, குணபால ரத்ணசேகர, பிரமித பண்டார தென்னக்கோன், டபிள்யு.டி. வீரசிங்க மற்றும் மொஹமட் முஸம்மில் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இவர்களுக்கு மேலதிகமாக அரச அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சு மற்றும் திரைச்சேரியின் செயலாளர் எஸ். ஆர். ஆர்ட்டிகல உள்ளிட்ட நிதியமைச்சின் உயர்நிலை அதிகாரிகள் பலரும் இந்தக்குழுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


