logo

E   |   සි   |  

2016-03-21

செய்தி வகைகள் : செய்திகள் 

அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் 134வது அமர்வில் உயர்மட்ட தூதுக்குழு பங்கேற்கின்றது

சம்பிய குடியரசின் லுகாசா நகரில் 2016 மார்ச் 19 முதல் 23 வரை நடைபெறுகின்ற அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் 134வது அமர்வில் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் கௌரவ வசந்த சேணாநாயக்க, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, கௌரவ கே. காதர் மஸ்தான் பா.உ., கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் பா.உ. மற்றும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் திரு. தம்மிக தஸநாயக்க ஆகியோர் உள்ளடங்கிய உயர்மட்டக் தூதுக்குழு பங்கேற்கின்றது.

 

பாராளுமன்ற உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் மீது குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுடன் தொடர்புடைய தகவல்களை வழங்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் பற்றிய அனைத்து பாராளுமன்ற குழு 2016 மார்ச் 18 அன்று அதன் அமர்வுகளில் பங்கேற்பதற்கு இவ்உயர் மட்டக்குழுவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. தற்போது இக்குழுவின் முன்னிலையில் ஐந்து (05) விசாரணைகள் முடிவுறாது உள்ளன. இவற்றில் மறைந்த கௌரவ ஜோசப் பரராஜசிங்கம் பா.உ., மறைந்த கௌரவ நடராஜா ரவிராஜ் பா.உ., மறைந்த கௌரவ தி. மகேஸ்வரன் பா.உ., மறைந்த கௌரவ த.மு. தஸநாயக்க பா.உ. ஆகியோரின் அரசியற் படுகொலைகளும் கௌரவ சி. சிறீதரன் பா.உ. அவர்களை படுகொலை செய்வதற்கான முயற்சியும் உள்ளடக்குகின்றன.

 

வங்காளதேஷம், சுவிட்சர்லாந்து, பஹ்ரேன், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, செனகல், ஆப்கானிஸ்தான், சிலி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளை உள்ளடக்குகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகளின் மீதான அனைத்து பாராளுமன்ற ஒன்றியக் குழு, நிகழ்வின் தொடக்கத்தில் இலங்கைத் தூதுக்குழுவினரை மனமார வரவேற்றதுடன் மேற்குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் அதன் விசாரணைகளை நடாத்துவதில் குழுவிற்கு இலங்கை பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்காகவும், உதவிக்காகவும் இலங்கை தூதுக்குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் மீதான அனைத்து பாராளுமன்ற ஒன்றியத் தவிசாளர் திரு. ஏ.பி.எம். பஸ்லி கரிம் சௌத்ரி அவர்கள் அதன் குழு சார்பில் தனது நன்றியினைத் தெரிவித்தார்.

 

இத்தொடர்புடைய விடயங்களின் தற்போதைய நிலை பற்றியும் அதன் முன்னேற்றம் பற்றியும் விளக்கிய கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள், இவ்விடயங்களில் அனேகமானவை நீதிமன்றங்களின் முன் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்தார். நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவுற்றதுடன் அவற்றின் தீர்மானங்கள் பற்றி குழுவுக்கு தெரியப்படுத்தும் படி வேண்டியதுடன் இவ்விடயங்கள் தொடர்பில் விரைவான தீர்மானங்கள் எடுக்கப்படுவதனை தாம் விரும்புவதாகவும் குழு தெரிவித்தது.

 

அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தின் கீழ் சுயாதீன ஆணைக்குழுக்களை தாபித்தல் அத்துடன் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சாதாரணமான தாக்கம் ஒன்றினை கொண்டிருக்கக்கூடிய பாராளுமன்ற குழு முறைமையொன்றினை வலுப்படுத்தல் என்பன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் குழு கௌரவ சபாநாயகர் அவர்களிடம் வினவியது. இது தொடர்பில் அவசியமான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஆணைக்குழுக்களின் சீரான தொழிற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என்பதை விளக்கிய கௌரவ சபாநாயகர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக நாட்டுக்காக புதிய அரசியலமைப்பொன்றினை ஏற்படுத்தும் பொருட்டு அரசியலமைப்புச் சபை ஒன்றினை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தில் 2016 மார்ச் 09 அன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என மனித உரிமைகள் குழுவுக்கு விளக்கினார்.

 

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks