பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026, மார்ச் 19 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2026 ஏப்ரல் 07 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 4.45 | (i) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இச்சட்டமூலத்திற்கு எதிராக அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் எதுவித மனுக்களும் தாக்கல் செய்யப்படாதவிடத்து, இரண்டாம் மதிப்பீட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படும்) (ii) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், இச்சட்டமூலத்திற்கு எதிராக அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் எதுவித மனுக்களும் தாக்கல் செய்யப்படாதவிடத்து, இரண்டாம் மதிப்பீட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படும்) (iii) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன (இவ்வொழுங்குவிதிகள் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) (iv) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி – அங்கீகரிக்கப்படவுள்ளன (இவ்வொழுங்குவிதி 2026.03.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) (v) இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன (இவ்விதிகள் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 4.45 - பி.ப. 5.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துதல் – அங்கீகரிக்கப்படவுள்ளன (2026.03.19 வெளியிடப்பட்ட 139 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.30 | இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2018) – அங்கீகரிக்கப்படவுள்ளது (விவாதமின்றி) (2026.03.19 வெளியிடப்பட்ட 139 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்) |
|
2026 ஏப்ரல் 08 புதன்கிழமை |
|
| இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை) | |
|
2026 ஏப்ரல் 09 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 2.00 | (i) தரைப்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது (ii) கடற்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது (iii) வான்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது (மேலுள்ள (i.), (ii.) மற்றும் (iii.) ஆகிய ஒழுங்குவிதிகள் 2026.03.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2026.03.20 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) (iv) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது (கௌரவ சனாதிபதி அவர்களினால் இத்தீர்மானம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், இது எடுத்துக் கொள்ளப்படவுள்ளது) (v) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது (கௌரவ சனாதிபதி அவர்களினால் இத்தீர்மானம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், இது எடுத்துக் கொள்ளப்படவுள்ளது) |
| பி.ப. 2.00 - பி.ப. 5.30 | 2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2026 ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.30 |
வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks