பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ், உயர் கல்வி அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் பிரகாரம் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பாக ஆக்கப்பட்டு, 2014 நவெம்பர் 04 ஆம் திகதிய 1887/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4) ஆம் பிரிவின் கீழ், உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 21 ஆம் திகதிய 1885/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை சபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சிவில் விமான சேவைகள்
(ii) தாவரவியல் பூங்காக்கள், பொதுப் பொழுதுபோக்கு அலுவல்கள்
பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) – குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2015) ஒதுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் பிரேரிக்கப்பட்டன:-
(i) கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை - நிறைவேற்றப்பட்டது
(ii) ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் - ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்படவுள்ளது
(iii) மடஹபொல ஸ்ரீ ரத்னபாலராம விகாரையின் பௌத்த கல்வி அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 5 முதல் 9 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(iv) கல்பவுருக்ஷ சங்வர்தன பதனம (கூட்டிணைத்தல்)
(v) ஸிவ்முனி ஸே வெஹர பௌத்த மன்றம் (கூட்டிணைத்தல்)
(vi) பி. ஹரிசன் சமுதாய அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)
(vii) சித்தசுவாதீனம் குறைந்த பிள்ளைகளுக்கான பாடசாலையின் நலன்புரிச் சங்கம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)
(viii) இலங்கை தொழில்வாண்மையிலான சமூகப் பணியாளர்களின் ஒன்றியம் (கூட்டிணைத்தல்)
அதனையடுத்து, 1840 மணியளவில் பாராளுமன்றமானது 2014 நவம்பர் 24ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2015]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks