E   |   සි   |  

2014 ஒக்டோபர் 31 ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுகளுக்கான மக்கள் வங்கி
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2013 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்திர செயலாற்றுகை அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2015) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2015) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஆறாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பாடசாலைகளில் மஹிந்தோதய ‘ஞான பிரதீப’ நிகழ்ச்சித் திட்டம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜானக வக்கும்புர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2014 நவம்பர் 01ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2015]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks