E   |   සි   |  

2014 செப்டெம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்க சேவை ஆணைக்குழு
(ii) 2012 ஆம் ஆண்டிற்கான அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம்
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் (SLIDA) 
(iv) 2011/2012 ஆம் ஆண்டிற்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனி லிமிட்டெட்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vi) 2013 ஆம் ஆண்டிற்கான அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்கம்
(vii) 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய திட்டமிடல் திணைக்களம்
(viii) 2013 ஆம் ஆண்டிற்கான பொதுத் திறைசேரியின் அரசிறைக் கொள்கைகள் திணைக்களம்
(ix) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம்
(x) 2013 ஆம் ஆண்டுக்கான வர்த்தக திணைக்களம்
(xi) 2013 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
(xii) 2013 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத்துறை அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(xiii) 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட  குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2014


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டமூலம்

திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“முக்கிய இடங்களிலிருந்து பத்தரமுல்லைக்கான போக்குவரத்து வசதிகள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜானக வக்கும்புர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1855 மணியளவில் பாராளுமன்றம் 2014 செப்டெம்பர் 24ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks