E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iii) 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தல் சட்டத்தின் 23 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் கமத்தொழில் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2014 யூலை 10 ஆம் திகதிய 1870/63 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(iv) 2012 ஆம் ஆண்டிற்கான நிர்மாணம் பயிற்சியளிப்பு அபிவிருத்திக்கான நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கால விதிப்பு (திருத்தம்)

(68 ஆம் அத்தியாயமான) கால விதிப்புக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு  சட்டமூலத்தினை கெளரவ நீதி அமைச்சர் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

• (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 123 முதல் 127 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) இலங்கை அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம்
(ii) கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளைகள்
(iii) தாம்பே, மீகொட போதிவர்தனாராம சிரி மதுரசாம பிரிவென் விஹாரை அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(iv) நிமல் சிறிபால த சில்வா மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(v) லக்‌ஷ்மன் வசந்த பெரேரா சமுதாய அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்

• பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 130 மற்றும் 131 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) அல்-ஜாமிஅதுல் இஸ்லாமிய்யா அறபி வித்தியாலயம் (கூட்டிணைத்தல்)
(ii) இலங்கை மரபுரிமைகள் மன்றம் (கூட்டிணைத்தல்)

• பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 128, 129,132 மற்றும் 133 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “பீ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) த பேரண்டஸ் மன்றம் (கூட்டிணைத்தல்)
(ii) ஆசிய, ஜப்பான், இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் சமூக, பொருளாதார மற்றும் மனித வள அபிவிருத்திக்கான சர்வதேச மன்றம் (கூட்டிணைத்தல்)
(iii) அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (கூட்டிணைத்தல்)
(iv) வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்றம் (கூட்டிணைத்தல்)


அதனையடுத்து,  மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூலை 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks