E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1987 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, கமக்காரர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் 29 ஆம் பிரிவின் கீழ் கமக்காரர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக சனாதிபதியினால் விதிக்கப்பட்டு 2014 மார்ச்சு 14 ஆம் திகதிய 1853/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(ii) 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட  குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2014

(iii) 1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, இலங்கை தேசிய நீரியல் பொருட்களை பண்படுத்துதல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (இ) பந்தியின் கீழ் கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 நவம்பர் 30 ஆம் திகதிய 1734/12 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(iv) 2006 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்கச்  சட்டத்தால் திருத்தப்பட்டவாறாகன  1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, இலங்கை தேசிய நீரியல் பொருட்களை பண்படுத்துதல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) பந்தியின் கீழ் கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின வளங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2012 நவம்பர் 30 ஆம் திகதிய 1786/26 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(v) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கையும் கணக்காய்வும்

(vi) 2013 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசானின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை

அரசாங்கம் மீதான  நம்பிக்கையில்லா பிரேரணை எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2014 மே 21ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks