E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டிற்கான புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
(ii) 2012 ஆம் ஆண்டிற்கான தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iii) 2011 ஆம் ஆண்டிற்கான ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம்(iv) 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை போக்குவரத்து சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் விடயங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) விசேட வியாபாரப் பண்ட அறவீடு (திருத்தச்) சட்டமூலம்
(ii) கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) தவணை தவறிய வரிகள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iv) பணச் சட்டம் (திருத்தச்) சட்டமூலம்
(v) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்
(vi) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(vii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள்
(viii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை

இலங்கை கிரிக்கெட் அணிக்குப் பாராட்டுத் தெரிவித்தல்

பங்களதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இலங்கை கிரிகெட் அணிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் முகமாக ஒரு விசேட தீர்மானம் நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கௌரவ நிமால் சிறிபால டி சில்வா அவர்களால் பிரேரிக்கப்பட்டதோடு, அது எதிர்க்கட்சி பிரதம கொறடா கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களால் ஆதரவளிக்கப்பட்டது.

பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 10 முதல் 13 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ”க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்)
(ii) இலவசக் கல்விக்கான உரிமை
(iii) இர/குருவிட்ட மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் கழகம் (கூட்டிணைத்தல்)
(iv) மொஹான் லால் கிரேரு மன்றம்  (கூட்டிணைத்தல்)

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 14 மற்றும் 15 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(v) சமஸ்த லங்கா சாசனாரக்சக மண்டலய (கூட்டிணைத்தல்)
(vi) பெளத்த விகாரைகளை மறுசீரமைத்தல் மன்றம் (கூட்டிணைத்தல்)


அதனையடுத்து, 1805 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஏப்ரல் 10ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks