பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடனும், 2008 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, தேசிய பொது வழிகள் சட்டத்தின் 13 ஆம் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 89 ஆம் பிரிவின் (2) ஆம் பந்தியின் (இ) எனும் உட்பந்தியின் கீழ் பாவனையாளர் கட்டண தேசிய பெருந்தெருவினைப் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு வாகனத்தினதும் சாரதியிடமிருந்து அறவிடப்பட வேண்டிய கட்டணங்கள் தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்டு 2013 ஒற்றோபர் 17 ஆம் திகதிய 1832/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென் பிராந்திய அபிவிருத்தி அதிகார சபை
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமுர்த்தி அதிகாரசபை
(v) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை மலையக அபிவிருத்தி அதிகாரசபை
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி நிதியம்
(vii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகம்
(viii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை உல்லாசப் பிரயாணத்துறை அபிவிருத்திப் பணியகம்
(ix) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை இணக்கப்பாட்டுப் பணியகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயதிலக பொடிநிலமே அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் அவர்கள் பின்வரும் சட்டமூலங்களைப் பிரேரித்தார்:-
1. சேர்பெறுமதி வரி (திருத்தம்)
(2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர் பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
2. உண்ணாட்டரசிறை (திருத்தம்)
(2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
3. நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)
(2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
4. பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்)
(2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, பொருளாதாரச் சேவை விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
5. தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தம்)
(2011 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, தொலைத்தொடர்பு அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
6. விசேட வியாபாரப் பண்ட அறவீடு (திருத்தம்)
(2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, சிசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
7. கம்பெனிகள் (திருத்தம்)
(2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தைத் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
8. தவணை தவறிய வரிகள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்)
(2010 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, தவணை தவறிய வரிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
9. பணச் சட்டம் (திருத்தம்)
((422 ஆம் அத்தியாயமான) பணச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)
அதனையடுத்து, 1556 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஏப்ரல் 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks