E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைகள் தொடர்பிலான தீர்மானம். (2014 சனவரி 20 ஆம் திகதிய 1846/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(ii) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2014 சனவரி 20 ஆம் திகதிய 1846/7 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.

(iii) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் (1) ஆம் பிரிவின் கீழ் மதுவரி தொடர்பில் நிதி, திட்டமிடல் உப அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 சனவரி 20ஆம் திகதிய 1846/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  விதிகள். (962 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல்)

(iv) காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ், மதுவரி தொடர்பில், நிதி திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2014 சனவரி 20 ஆம் திகதிய 1846/9 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை. (963 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல்)

(v) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி ஆணைக்குழு
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிலையம்
(viii) 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கைப்பணிகள் சபை (லக்சல)

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தீர்மானம்

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

பின்வரும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2, 3, 7 மற்றும் 8 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) இரண்டாம் மதிப்பீட்டு (கூட்டிணைத்தல்) சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “பீ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

• பாராளுமன்றத்தின் இளைப்பாறிய பணியாளர் சங்கம்
• பி. ஹரிசன் சமுதாய அபிவிருத்தி மன்றம்
• வசந்த சேணாநாயக்க மன்றம்
• இலங்கை உளவியல் கழகம்

பின்வரும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 4 முதல் 6 ஆம் இலக்கம் வரையான விடயங்களாகக் காணப்படும்) இரண்டாம் மதிப்பீட்டு (கூட்டிணைத்தல்) சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

• மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ சங்கம்
• மகமெவுனாவ சதஹம் சேவாவ
• ஸிவ்முனி ஸே வெஹெர பெளத்த மன்றம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தேசிய வீதி அபிவிருத்திக் கொள்கையை வகுத்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நலின் பண்டாற ஜயமஹ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2014 மார்ச் 19ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks