பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2012 ஆம் ஆண்டிற்கான அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் சாத்திய அறிக்கை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
மருத்துவம் (திருத்தம்)
(105 ஆம் அத்தியாயமான) மருத்துவக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பிரேரித்தார்.
2013 ஓகத்து மாதம் 07ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ எம்.ரி. ஹசன் அலி அவர்களுக்கு “றோயல் புண்ணியமைப்பு மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணை சபையால் நிறைவேற்றப்பட்டது:-
கித்துள் கைத்தொழிலை மேம்படுத்து முகமாக கித்துள் பயிர்ச் செய்கையை அதிகரித்தல்
கிராமிய பிரதேசங்களில் கித்துள் பாரியளவு பங்களிப்பை வழங்குவதால், கிராமியக் கைத்தொழிலுக்கும் கிராமிய மக்களுக்கும் ஊக்கமளித்து தாவர உணவிற்காக வளர்க்கப்படும் கித்துள் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்னும் எமது குறிக்கோள் திட்டத்திற்கு அமைவாக புதிய கித்துள் பயிர்ச்செய்கைகளை அதிகரிப்பதற்கான தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தளபாடக் கைத்தொழில் துறையிலுள்ள மரக் குற்றிகளின் திருட்டு” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1517 மணியளவில் பாராளுமன்றம் 2014 மார்ச் 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks