பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கையும் ஆண்டுக்கணக்குகளும்.
பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்கள்
விசேட கருத்திட்டங்கள் பற்றிய ஆலோசனைக்குழு எனும் ஆலோசனைக் குழுவொன்று பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக
106 ஆவது நிலையியற்கட்டளை மூலம் தடைபெறாமல், குழுவானது 109 ஆவது நிலையியற் கட்டளையின் பிரகாரம் தனக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஐந்து (05) பேருக்கு குறையாததும் இருபத்தைந்து (25) பேருக்கு மேற்படாததுமான உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக
இவ் ஆலோசனைக் குழுவினது கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
பாராளுமன்றச் சேவையின் சுயாதீனப் பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிகுழு
2014 ஏப்பிறல் மாதம் 30ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசானின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ அசல ஜாகொடகே அவர்களுக்கு “தர்மதீப நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை தேசிய நீரியல் பொருட்களைப் பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ இரான் விக்கிரமரத்ன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1855 மணியளவில் பாராளுமன்றம் 2014 பெப்ரவரி 21ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks