பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் 126 ஆம், 321 ஆம் பிரிவுகளின் கீழ் சனாதிபதியால் ஆக்கப்பட்டு 2013 யூலை மாதம் 12 ஆம் திகதிய 1818/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(ii) காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52)  22(1) ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;

அ) 2013 யூலை 29 ஆம் திகதிய 1821/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி (மதுவரி அறிவித்தல் இலக்கம் 958)
ஆ)  2013 யூலை 29 ஆம் திகதிய 1821/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி (மதுவரி அறிவித்தல்கள் 959, 960, 961)

(iii)   (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதிகள் தீர்வைகள் சம்பந்தமான  தீர்மானம். (2013 யூலை 29 ஆம் திகதிய 1821/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(iv)  அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்ட கட்டளைகள்

அ) 2013 யூலை மாதம் 11 ஆம் திகதிய 1818/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
ஆ) 2013 யூலை மாதம் 31 ஆம் திகதிய 1821/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
இ) 2013 ஓகத்து மாதம் 22 ஆம் திகதிய 1824/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

(v) 2013 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட, 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் IV ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2013. யூலை மாதம் 11 ஆம் திகதிய 1818/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(vi) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2013 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின்       15(1) ஆம் பிரிவின் கீழ் பயிர் காப்புறுதி அறவீடு தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்டு 2013 ஓகத்து மாதம் 23 ஆம் திகதிய 1824/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(vii) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2013 யூலை மாதம் 29 ஆம் திகதிய 1821/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(viii) வருமானங்கள் மற்றும் மூலதனத்தின் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பனவைத் தவிர்ப்பதற்காகவும் வரி செலுத்தாது தட்டிக்கழிப்பதனைத் தடுப்பதற்காகவும் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் லக்ஸம்பேர்க் பேரரசின் அரசாங்கத்திற்கும் இடையில் 2013 சனவரி 31 ஆந் திகதி செய்து கெள்ளப்பட்ட சமவாயம்

(ix) வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காகவும் வரி செலுத்தாது தட்டிக் கழிப்பதனைத் தடுப்பதற்காகவும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும்

அ) பலஸ்தீன அரசாங்கத்திற்கும் இடையில் 2012 ஏப்பிறல் 16 ஆந் திகதி 
ஆ) சீசெல்ஸ் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் 2011 செத்தெம்பர் 23 ஆந் திகதி 
இ) பெலாருஸ் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் 2013 ஓகத்து 26 ஆந் திகதி

செய்துகொள்ளப்பட்ட மூன்று ஒப்பந்தங்கள்

(x) 2012 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2013.  (இல 1 மற்றும் இல 2)

(xi) திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கிழ், நிதி, திட்டமிடல் அமைச்சரிடம் கலந்துரையாடி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;

அ) 2013 செத்தெம்பர் 23 ஆம் திகதி 1829/23 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி 
ஆ) 2013 செத்தெம்பர் 23 ஆம் திகதி 1829/24 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பெளத்த அறநிலையங்கள் (திருத்தம்)
பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பிரேரித்தார்.

விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயம்
விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சர்வதேச சமவாயத்திற்குப் பயனளிப்பதற்கும்; ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவராண்மையைத் தாபிப்பதன் மூலம் சொல்லப்பட்ட சமவாயத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கும், மேற்கூறப்பட்ட சமவாயத்தின் கட்டுக்கோப்பிற்குள் விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டை எதிர்த்து நிற்பதற்கும் ஏற்புடைத்தான உள்ளூர் சட்டச் செயலமைப்பொன்றைக் குறித்துரைப்பதற்கும் ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ அஜித் பி. பெரேரா அவர்களுக்கு “2000 ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க, இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நிதி, திட்டமிடல்  அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அபிவிருத்தி (திருத்தச்) சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கிதுல்கல புரோட் லேன் நீர்மின்சக்தி கருத்திட்டம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நலின் பண்டாற ஜயமஹ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1831 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஒக்டோபர் 09ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks