பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்)

1980 ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க, தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டத்தின் குறித்த சில தேவைப்பாடுகளிலிருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆட்களுக்கு விலக்களிப்பதற்கு விசேட ஏற்பாட்டைச் செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை நீதி அமைச்சர் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ பொன். செல்வராசா அவர்களுக்கு "மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ சங்க (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ திலிப் வெதஆராச்சி அவர்களுக்கு "கலாசாரம் மற்றும் பண்பாடுகளைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கை கலாசார மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(iii) கெளரவ விதுற விக்கிரமநாயக்க அவர்களுக்கு "ஸ்ரீ சித்தார்த்த மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i), (ii) மற்றும் (iii) என்பன முறையே
• பெளத்த சாசன, மத அலுவல்கள்
• கலாசார, கலை அலுவல்கள்
• சமூக சேவைகள்
அமைச்சர்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்

இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் எதிர்வரும் தினமொன்றிற்கு ஒத்திவைக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"அரச சார்பற்ற நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1916 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூன் 07ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks