பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சு
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான காலி மாவட்ட செயலாளர் அலுவலகம்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான காணி, காணி அபிவிருத்தி அமைச்சு
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய மரபுரிமைகள் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(vi) 2012 ஆம் ஆண்டுக்கான சிவில், விமான சேவைகள் அமைச்சின் செயல் முன்னேற்றுகை அறிக்கை


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i) கெளரவ அப்துல் ஹலீம் அவர்களுக்கு "அக்குறனை ஜாமிஆ ரஹ்மானியா அறபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ புத்திக பதிரண அவர்களுக்கு "செரெட்சே காமா மன்றம் நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(iii) கெளரவ ஹுனைஸ் பாறூக் அவர்களுக்கு "கல்ஹின்ன ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (iii) பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருக்கும், சட்டமூலம் (ii) சமூக சேவைகள் அமைச்சருக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பத்திரிகைப் பேரவைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"உரப் பற்றாக்குறை" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பி. ஹரிசன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1923 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூன் 06ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks