பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டுக்கான இராணுவ சேவா அதிகார சபை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான அநுராதபுர புத்தசிராவக்க பிக்கு பல்கலைக்கழகம்
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவை பல்கலைக்கழகம்
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான கிழக்கு பல்கலைக்கழகம்
(v) 2010 ஆம் ஆண்டுக்கான உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழில் நுட்பவியல் நிறுவகம்
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான களனி பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பெளத்தக் கல்விப் பட்டப்பின்படிப்பு நிறுவகம்
(vii) 2011 ஆம் ஆண்டுக்கான துறுசவிய நிதியம்
(viii) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனம்
(ix) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபை
(x) 2010 ஆம் ஆண்டுக்கான லுணுவில தெங்கு ஆராய்ச்சி நிறுவனம்
(xi) 2011 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகார சபை
(xii) 2011 ஆம் ஆண்டுக்கான தென்னை பயிர்ச்செய்கை சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(xiii) தேசிய அரசுப் பேரவையின் 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க இலங்கைப் பத்திரிகைப் பேரவைச் சட்டத்தின் 10 ஆம் 25 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 30 ஆம் பிரிவின் கீழ் வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதி (2013.02.15 ஆம் திகதிய 1797/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


பாராளுமன்றச் சேவையின் சுயாதீனப் பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிகுழு

2013 ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வரின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ எரிக் பிரசன்ன வீரவர்தன அவர்களுக்கு "கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவர் கழக (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 11 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"இலங்கையில் பெண்களுக்கான கிரிகெட்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ விக்டர் அந்தனீ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, மணியளவில் பாராளுமன்றம் 2013 மே 31ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1445 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks