பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)
2006,
2007 மற்றும்
2008 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு இயக்கச் சபை
(ii)
2011 ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
பாதுகாப்புச் சேவைகள் ஏவல் மற்றும் பணியாட்டொகுதிக் கல்லூரி (திருத்தம்)
2008 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, பாதுகாப்புச் சேவைகள் ஏவல் மற்றும் பணியாட்டொகுதிக் கல்லூரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களுக்கு
"ஏர்ல் குணசேகர மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 4,5,8 மற்றும் 9ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுத் (திருத்தம்)
(ii) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்)
(iii) மதுவரி (திருத்தம்)
(iv) தொலைத்தொடர்பு அறவீட்டுத் (திருத்தம்)
- திருத்தங்களுடன்
அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றம் 2013 மார்ச் 20ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.