E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2005, 2006, 2007, 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம்
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பின்வரும் சட்டமூலங்களைப் பிரேரித்தார்:-

1. நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தம்)

(2003 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க, நிதி முகாமைத்துவப் (பொறுப்புச்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

2. சேவை விதிப்பனவு (திருத்தம்)

(2006ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க, பொருளாதாரச் சேவை விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)


3. மதுவரி (திருத்தம்)

((52ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

4. செயல்நுணுக்கு அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (திருத்தம்)

(2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

5. துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுத் (திருத்தம்)

(2011ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க, துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

6. தொலைத்தொடர்பு அறவீட்டுத் (திருத்தம்)

(2011ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க, தொலைத்தொடர்பு அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

7. சேர் பெறுமதி வரி (திருத்தம்)

2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, சேர் பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்

8. சுங்கம் (திருத்தம்)

((235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

9. பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்)

(1998ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க, பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

10. நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)

(2009ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

11. உண்ணாட்டரசிறை (திருத்தம்)

(2006ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

12. வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு (திருத்தம்)

(2011ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

13. நிதிச் சட்டம்

(1995ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க, நிதிச்சட்டம், 2003ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க நிதிச்சட்டம், 2012ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க நிதிச்சட்டம் மற்றும் 1963ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க நிதிச்சட்டம் என்பவற்றைத் திருத்துவதற்கும் பயிர்க்காப்புறுதி அறவீடொன்றை விதிப்பதற்காக ஏற்பாடுசெய்வதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட மற்றும் அவற்றுக்கு இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்)

14. திருமணப் பதிவு (திருத்தம்)

(திருமணப் பதிவுக் கட்டளைச்சட்டத்தைத் (அத்தியாயம் 112) திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

15. திருமண, மணநீக்கம் (திருத்தம்)

((115ஆம் அத்தியாயமான) முஸ்லிம் திருமண, மணநீக்கச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

16. பிறப்புக்கள், இறப்புக்கள் பதிவு (திருத்தம்)

((110ஆம் அத்தியாயமான) பிறப்புக்கள், இறப்புக்கள் பதிவுச் சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

17. நொத்தாரிசு (திருத்தம்)

((அத்தியாயம் 107) நொத்தாரிசு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

18. கண்டிய திருமண, மணநீக்கம் (திருத்தம்)

((113ஆம் அத்தியாயமான) கண்டிய திருமண, மணநீக்கச் சட்டத்தைத் செய்வதற்குமானதொரு சட்டமூலம்)

19. ஆவணப் பதிவு (திருத்தம்)

((117 ஆம் அத்தியாயமான) ஆவணப் பதிவுக் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

20. அற்றோனித் தத்துவம் (திருத்தம்)

((122 ஆம் அத்தியாயமான) அற்றோணித் தத்துவக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

21. மீள குடியமர்த்துதல் அதிகாரசபை (திருத்தம்)

(2007 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க, மீள குடியமர்த்துதல் அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன:-

நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளமுடியாதுள்ள வயற்காணிகளை பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துதல்

வயற் காணிகளை நிரப்புவதற்கான சட்டம் மீறப்படாத வகையில், ஒழுங்குமுறையான ஆய்வு ஒன்றின் மூலம் இனங்காணப்பட்டதன் பின்னர் எவ்வகையிலும் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத வயற் காணிகளில் பயனுள்ள விவசாய உற்பத்திகளை மட்டும் பயிரிடுவதற்கும், நிர்மாணப் பணிகளுக்காக எவ்வித வாய்ப்புகளும் கிடைக்காத வகையிலுமான நிகழ்ச்சித் திட்டங்களை வகுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

தெங்குக் கமத்தொழில், தெங்கு சார் வளங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தியையும் மேம்பாட்டையும் ஒழுங்கமைத்தல்

வர்த்தக ரீதியான உற்பத்திகளில் தென்னை முக்கிய இடத்தை வகிப்பதால், வளங்களையும், சுற்றாடலையும் நிலைத்து நிற்கச் செய்கின்ற அதேவேளை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு குறிப்பிடக்கூடியளவு பங்களிப்புச் செய்யக்கூடிய விதத்தில் வளர்ச்சியடையும் அபிவிருத்தியை ஒழுங்கமைத்து தென்னைக் கைத்தொழில் மற்றும் தென்னை சார் வளங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அர்த்த புஷ்டியுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"செங்கடகலையிலுள்ள மூடப்படவேண்டிய மதுபானக் கடைகள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1815 மணியளவில் பாராளுமன்றம் 2013 மார்ச் 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks