E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

இலங்கை மின்சாரம் (திருத்தம்)

2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை வலு, சக்தி அமைச்சர் பிரேரித்தார்.


பாராளுமன்றச் சேவையின் சுயாதீனப் பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிகுழு

2013 மே மாதம் 31ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசானின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டன:-

(i) பொது ஒப்பந்தங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - நிறைவேற்றப்பட்டது

(ii) பாப்பரசர் XVI ஆம் ஆசீர்வாதப்பர் அவர்களின் சேவையை பாராட்டுதல்


ஒத்திவைப்புப் பிரேரணை

"தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற சம்பவம்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இராஜவரோதியம் சம்பந்தன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2013 பெப்ரவரி 21ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks