E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத திணைக்களம்
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
(iii) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான போக்குவரத்து அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iv) 2011 ஆம் ஆண்டுக்கான குருணாகல் ப்ளான்டேஷன் லிமிற்றட்
(v) 2011 ஆம் ஆண்டுக்கான பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனி லிமிடெட்
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சு

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம்

திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன:-

நீதிமன்றங்களை அவமதித்தல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்களை ஆக்குதல்

சகலருக்கும் சமமான நியாயத்தை உறுதிப்படுத்துவதற்காக சனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பலமான சுதந்திர ஊடகவியலை ஏற்படுத்துவதற்கும் நீதிமன்றங்களை அவமதித்தல் நடைமுறை களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்களை ஆக்க வேண்டுமென்று இப்பாராளு மன்றம் தீர்மானிக்கின்றது.

வீட்டிலிருந்து தொழில் புரிவோருக்கான தேசிய கொள்கையொன்றை வகுத்தல்

இலங்கையில் பலதரப்பட்ட தொழில் வாய்ப்புத் துறைகளில் பல தரப்பட்ட உற்பத்திப் பணிகளில் ஈடுபடும் சுமார் பத்து இலட்சம் பேர்களான வீட்டிலிருந்து தொழில் புரிவோர்களுக்காக அரசியல் அதிகாரம் வாய்ந்தோர்கள், அதனுடன் தொடர்புபட்ட சகல துறைகளினதும் தேர்ச்சிபெற்றவர்கள் புத்தி ஜீவிகள் உட்பட அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியைப் பெற்று முறையான தேசிய கொள்கையொன்றை வகுத்து அதனை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பட்டதாரி கிராம உத்தியோகத்தர்களை கெளரவிப்பதற்கான ஒரு கொடுப்பனவைச் செலுத்துதல்

அரசாங்க சேவையை கிராமிய மட்டத்தில் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக சேவையாற்றுகின்ற கிராம உத்தியோகத்தர்கள் க.பொ.த. (உ/த) பரீட்சையின் பின்னர் போட்டிப் பரீட்சையின் புள்ளிகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள போதிலும், தற்போது சேவையாற்றி வருகின்ற கிராம அலுவலர்களில் சுமார் 30 % முதல் 40 % வரையிலானோர் பட்டத் தகைமைகளைப் பெற்றுள்ளனராதலாலும், இதற்கென எவ்வித விசேட கவனமும் இதுவரை செலுத்தப்படாதுள்ளதனாலும், பட்டத் தகைமையை கெளரவிக்கு முகமாக பட்டதாரி கிராம அலுவலர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

காலி மாவட்டத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பற்றிய ஆய்வு நூலொன்றைத் தயாரித்தல்

காலி மாவட்டத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, தொல்பொருளியல் மற்றும் கலாசார ரீதியில் பெறுமதி வாய்ந்த இடங்கள் பற்றிய பரந்த ஆய்வினை மேற்கொண்டு, அது தொடர்பில் அறிவியல் பெறுமதிமிக்க ஆய்வு நூலொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"சட்ட ஆவணங்களுக்கான முத்திரை கட்டணங்களைக் குறைத்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1903 மணியளவில் பாராளுமன்றம் 2013 பெப்ரவரி 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks