E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை
(ii) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
(iii) 2008 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iv) 2011 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களம்
(v) 2011 ஆம் ஆண்டிற்கான சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சு
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பித்தல்

"இலங்கை புனித சூசையப்பர் சகோதரர் சபை (திருத்தச்)" சட்டமூலம் பற்றிய "பீ" நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் சமர்ப்பிக்கப்பட்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ஹுனைஸ் பாறூக் அவர்களுக்கு பின்வரும் கூட்டிணைத்தல் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது;

(i) ஐக்கிய முஸ்லிம் உம்மா
(ii) ஸ்ரீ லங்கா ஹிரா பெளன்டேஷன்


நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன இரு சட்டமூலங்களும் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"நாட்டின் வெள்ள நிலைமை" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜனவரி 10ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks