பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.10.11ஆம் திகதிய 1779/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(ii) 2011 ஆம் ஆண்டின் 52ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு 240 இன் கீழ் வரவு செலவினத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2012
(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) பந்தியின் கீழ் உயர் கல்வி அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.11.21ஆம் திகதிய 1785/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(iv) சர்வதேச தொழில் மாநாட்டினால் அதன் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான 99 மற்றும் 100 ஆவது அமர்வுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயங்களும் விதப்புரைகளும்
(v) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை (2012.10.31ஆம் திகதிய 1782/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(vi)
2011 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சு
(vii)
2011 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(viii)
2010 ஆம் ஆண்டிற்கான தேயிலைச் சிறு பற்றுநிலங்கள் அபிவிருத்தி அதிகார சபை
(ix)
2009 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(x)
2011 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் திணைக்களத்தின் செயல்நிறைவேற்று அறிக்கையும் வருடாந்த கணக்குகளும்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களுக்கு
"ஹெல ஜன மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களுக்கு
"போத்தல - மீபாவல ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரை கல்வி நிவாரண மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(iii) கெளரவ உதித் லொக்குபண்டார அவர்களுக்கு
"குளோபல் ஹியுமெனிடேரியன் பவுன்டேஷன் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன மூன்று சட்டமூலங்களும் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
திவிநெகும சட்டமூலம்
இரண்டாம் மதிப்பீட்டின்போது பெயர் மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 160; எதிராக 53) மற்றும் மூன்றாம் மதிப்பீட்டின்போது பெயர் மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 159; எதிராக 42), திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 2035 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜனவரி 09ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.