E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான அரச ஈட்டு முதலீட்டு வங்கி
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை
(iii) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை (iv) 2008 மார்ச் 31, 2009 மார்ச் 31 மற்றும் 2010 மார்ச் 31 வருட முடிவுக்கான லங்காலேலன்ட் லிமிட்டெட்
(v) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய கடற்றொழில் மற்றும் கடலோடி எந்திரவியல் நிறுவகம் (சமுத்திர பல்கலைக்கழகம்) ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய மரபுரிமைகள் அமைச்சின் நிருவாக அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் 

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2013) ஒதுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 2013, 101 பெரும்பான்மை வாக்குகளால் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 'வரவு செலவுத் திட்டம் 2013' பிரிவுக்கு விஜயம் செய்க.


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 15 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள்
(ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான இரு கட்டளைகள்
(iii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள்
(iv) கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்
(v) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(vi) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள்


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜனவரி 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks