E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானுமானவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:-

1. நொத்தாரிசுகள் (திருத்தம்)

(நொத்தாரிசுகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)

2. ஆவணங்கள் பதிவு (திருத்தம்)

(ஆவணங்கள் பதிவுக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• உணவுச் சட்டத்தின் கீழான ஆறு ஒழுங்குவிதிகள்
• பாராளுமன்ற சேவையின் சுயாதீனப்பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிகுழு



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"நகர அபிவிருத்தி அதிகாரசபையின் சேவையை பாராட்டல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1915 மணியளவில் பாராளுமன்றமானது 2011 செப்டெம்பர் 21 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks