logo

E   |   සි   |  

2026 ஜுலை 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2025 ஆம் ஆண்டுக்கான அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2025 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2025 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2025 ஆம் ஆண்டுக்கான அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2025 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2025 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix)    2025 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர் நாயகத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x)    2025 ஆம் ஆண்டுக்கான காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi)    2025 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii)    2025 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நீர்ப்பாசனப் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2025 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் காணிப் பிரிவின் செயலாற்றுகை அறிக்கை
(xiv)    2025 ஆம் ஆண்டுக்கான தொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv)    2025 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xvi)    2025 ஆம் ஆண்டுக்கான சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xvii)    2025 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xviii)    2025 ஆம் ஆண்டுக்கான பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xix)    2025 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முனீர் முலாபர்                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஹங்சக விஜேமுணி - இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்

(ii)    கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
யாழ்ப்பாண மற்றும் வவுனியா சிறைச்சாலைகளிலுள்ள வசதிகள்

கௌரவ சுகாதார பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i)    ‘கிரிப்டோ நாணயங்களின் மற்றும் பிற டிஜிட்டல் சொத்துக்களின் ஒழுங்குபடுத்தல்’ மற்றும் ‘இலங்கையில் பரிமாற்றம் மற்றும் தீர்வுக்காக கடின நாணயங்களின் உத்தியோகபூர்வ அங்கீகாரம் மற்றும் ஏற்பு தொடர்பான பிரச்சினைகள்’ தொடர்பாக முறையே 2026.03.17 மற்றும் 2026.04.08 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர், கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
(ii)    வடக்கில் விடுவிக்கப்படாத தமிழ் மக்களின் காணிகளை முறைகேடாக பயன்படுத்தல் மற்றும் மீளளிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 2026.05.07 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களுக்கு “இலங்கை கல்வாரி தேவஸ்தானம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 இலக்க) பின்வரும் சட்டமூலங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-
(i)    பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்) – திருத்தங்களுடன் - மூன்றாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 154; எதிராக 02)
(ii)    நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்)
– திருத்தங்களுடன்
(iii)    பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்)



ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்  


அதனையடுத்து, 1815 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுலை 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks