பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டம்
2 : கௌரவ தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பொது மனுக்கள் தொடர்பானது
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கை இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XLIII (43) ஆம் பகுதியையும் மற்றும் நான்காவது தொகுதியின் XXVII (27), XXVIII (28), XXIX (29) மற்றும் XXX (30) ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2025 ஆம் ஆண்டுக்கான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2025 ஆம் ஆண்டுக்கான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2025 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2025 ஆம் ஆண்டுக்கான அரச நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2025 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2025 ஆம் ஆண்டுக்கான அரச கணக்குகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii) 2025 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(ix) 2025 ஆம் ஆண்டுக்கான பகிரங்க சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(x) 2025 ஆம் ஆண்டுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi) 2025 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரிவுகளின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii) 2025 ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xiii) 2025 ஆம் ஆண்டுக்கான மீன்வளம் மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiv) 2025 ஆம் ஆண்டுக்கான சட்டவரைஞர் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv) 2025 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvi) 2025 ஆம் ஆண்டுக்கான கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xvii) 2025 ஆம் ஆண்டுக்கான நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xviii) 2025 ஆம் ஆண்டுக்கான கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xix) 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தெகே
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. எம். தாஹிர்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தெகே
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
பொதுமக்களுக்குச் சொந்தமான வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலுள்ள காணிகளை மீளளித்தல்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிடி ஸ்கேன் இயந்திரம் பற்றாக்குறை தொடர்பாக 2026.06.26 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iii) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
ஒத்திவைப்புப் பிரேரணை
“வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1737 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுலை 9ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks