பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கை இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVIII (58), LIX (59) மற்றும் LX (60) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLIII (43) மற்றும் XLIV (44) ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2025 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2025 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2025 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(viii) 2025 ஆம் ஆண்டுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 மற்றும் 139 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நிறுவப்பட்ட புடவை மற்றும் ஆடை தொழிநுட்பவியல் துறையை, புடவை மற்றும் ஆடைப் பொறியியல் துறையாக திருத்துதல் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மாச்சு 20 ஆம் திகதிய 2480/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.05.05 முதல் 2026.05.29 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xi) 2025 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii) 2025 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் உரிமைகள் காப்புறுதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்.
(xiii) 2025 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(xiv) 2025 ஆம் ஆண்டுக்கான பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv) 2025 ஆம் ஆண்டுக்கான குருணாகல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, காலி, மாத்தறை, முல்லைத்தீவு, பதுளை, பொலன்னறுவை, களுத்துறை, கண்டி, அம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, அனுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டச் செயலகங்களின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(xvi) 2025 ஆம் ஆண்டுக்கான புத்தளம், நுவரெலியா, அம்பாறை, கொழும்பு, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டச் செயலகங்களின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் கணக்குகள்
(xvii) 2025 ஆம் ஆண்டுக்கான இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xviii) 2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xix) 2025 ஆம் ஆண்டுக்கான தாவரவியற் பூங்காக்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xx) 2025 ஆம் ஆண்டுக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ஜயசிங்ஹ
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
நெல் விலை நிர்ணயம், அரிசி இறக்குமதி மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த அரசின் கொள்கை
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
கொழும்பு துறைமுக நகரத்திற்கான மீட்கப்பட்ட நிலங்களின் விபரங்கள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) கனிம ஆய்வு, சுரங்கத் தொழில் மற்றும் தேசிய கனிமக் கொள்கை குறித்த விபரங்கள் தொடர்பாக 2026.06.24 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் பதிலளித்தார்.
(ii) இலங்கை துறைமுக அதிகாரசபையில் கிழக்கு முனைய கட்டுமானம் மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக 2026.06.23 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.
(iii) ‘தித்வா’ புயலுக்குப் பிறகு இழப்பீடு, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை செயல்படுத்துதல் தொடர்பாக 2026.02.03 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.
(iv) நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை தொடர்பான கூற்றொன்றினை வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயகொடி அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்புப் பிரேரணை
“நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1841 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுலை 8ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks